நான் நின்றுகொண்டேதான் குழந்தை பெற்றுக்கொள்வேன் - பாரதி கண்ணம்மா ஃபரீனா
Vijay Tv Bharathi Kannama Farina Sharings Tamil News 3 மாதத்திலிருந்து என் குழந்தையோடு உரையாடி வருகிறேன். நான் என்ன செய்கிறேன், நாம் எப்படி இருக்கவேண்டும் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்.
Vijay Tv Bharathi Kannama Farina Sharings Tamil News 3 மாதத்திலிருந்து என் குழந்தையோடு உரையாடி வருகிறேன். நான் என்ன செய்கிறேன், நாம் எப்படி இருக்கவேண்டும் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்.
Vijay Tv Bharathi Kannama Farina Sharings Tamil News
Vijay Tv Bharathi Kannama Farina Sharings Tamil News : தான் விரைவில் தாயாகப் போகிற விஷயத்தைச் சொன்ன நாளிலிருந்து ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் ஃபரீனா. என்றாலும், தான் தாயகப் போகும் விஷயத்தைத் தெரிந்துகொண்ட நாளிலிருந்து இன்று வரை எப்படியெல்லாம் தாய்மையை உணர்கிறார் என்பதை சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
"நான் கருவுற்ற விஷயம் எனக்கே பெரிய ஆச்சரியம். ஒவ்வொரு முறை மாதவிடாய் தள்ளிப்போகும்போதும், எதிர்பார்ப்பு தவிடுபொடியாகப் போயிருக்கிறது. அதேபோல்தான் இம்முறையும் மாதவிடாய் தள்ளிப்போகும்போது நினைத்தேன். அதுவும் கடுமையான வெய்யிலில் ஷூட் செய்துகொண்டு இருந்தோம். அதனால், மயக்கம், வாந்தி என்று நினைத்திருந்தேன். எதற்கும் சோதனை செய்து பார்க்கலாம் என்றுதான் சோதித்தேன். ஆனால், பாசிட்டிவ் என்று முடிவு வந்ததும் தாங்க முடியாத சந்தோஷம்.
Advertisment
Advertisements
ஆனால், அதனை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. அன்றைய தினம் முழுவதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். அடுத்த நாள் சர்ப்ரைஸ் பிளானர்ஸ் வைத்து கணவருக்கு இந்த விஷயத்தை சொன்னேன். பிறகு இயக்குநர், நண்பர்கள் என அனைவர்க்கும் கூறினேன்.
என்னதான் கர்ப்பமானாலும், செய்யும் வேலைக்கு எந்தவிதமான சாக்குப்போக்கும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்திருந்தேன். என்னுடைய எல்லா முயற்சிகளுக்கும் உழைப்பிற்கும் என் குழந்தை ஒத்துழைப்பு கொடுக்குறாங்க. 3 மாதத்திலிருந்து என் குழந்தையோடு உரையாடி வருகிறேன். நான் என்ன செய்கிறேன், நாம் எப்படி இருக்கவேண்டும் என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வேன்.
அதேபோல குழந்தை பிறப்பு பற்றி ஏராளமான விஷயங்களை இணையத்தில் பார்த்து வருகிறேன். அந்த வரிசையில் படுத்துக்கொண்டோ உட்கார்ந்துகொண்டோ குழந்தையைப் பெற்றுக்கொள்வதைவிட, நின்றுகொண்டே பெற்றுக்கொள்வது இன்னும் கொஞ்சம் பெட்டர் என்று கேள்விப்பட்டேன். அதைத்தான் நானும் முயற்சி செய்யலாம் என்று நினைக்கிறேன்".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil