scorecardresearch

இன்ஸ்டாவில் ஒரு கலக்கு கலக்கும் பாவனா.. டான்ஸ், சிங்கிங் எதையும் விடல

பாவானவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை.

vijay tv bhavana instagram
vijay tv bhavana instagram

vijay tv anchor bhavana:  விஜய் டிவி பாவனா என்றால் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள்.  தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் பணியை தேர்ந்தெடுத்தார் இவரின்  தமிழ் உச்சரிப்பை பலரும் கேலி செய்த நிலையில் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இணங்க தன்னுடைய அதிக திறமையை வெளிப்படுத்தி ஆங்கரிங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

சூப்பர் சிங்கரில் பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து பறந்து நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். டிஆர்பியில் முதலிடம் பிடித்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 5 பகுதிகளை தொகுத்து வழங்கி டாப் ஆங்கரானார் பாவனா.

ரசிகர்கள் இவருக்கு வைத்த பெயர் ’சின்னத்திரை தளபதி’… பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் சீக்ரெட்ஸ்!

தொடக்கத்தில் ராஜ் தொலைக்காட்சியில் நடிகை கல்யாணியுடன் இணைந்து பீச் கேர்ள்ஸ் என்ற நேர்க்காணல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார். குளோபஸ் வழங்கிய சிறந்த தொகுப்பாளினி விருது பாவனாவிற்கு கிடைத்துள்ளது.  சூப்பர் சிங்கர் ஆறாவது சீசனும் பாவனா தான் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட நிலையில் திடீரென்று பின் வாங்கினார். அதன் பின்பு அவரை விஜய் தொலைக்காட்சியில் பார்க்கவே முடியாமல் போனது.

VJ Bhavana

பாவனா சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கரிங்கில் பிஸியாக இருந்த தருணத்திலேயே சிங்கப்பூர் என்ஜினீயர் நிகில் ரமேஷ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.

அதுமட்டுமில்லை மேற்கிந்தியத் தீவுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கும் மாபெரும் அரிய வாய்ப்பும் பாவனாவுக்கு கிடைத்திருந்தது. கூடவே ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

இப்போது பாவனா இன்ஸ்டாவில்  ரொம்ப பிஸி. அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதை தவி இந்த லாக்டவுனில் கடுமையான உடற்பயிற்சி, சிங்கிங், டான்ஸ், வீட்டை சுத்த படுத்துவது என அடிக்கடி ஏதாவது போஸ்ட் செய்து ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv bhavana instagram vijay tv anchor bhavana super singer bhavana hotstar vijaytv bhavana