ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடும் சின்னத்திரை நிகழ்ச்சியாக உருவெடுத்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று, சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து சீசன் 2 எபிசோடுகளை ரசிகர்கள் கண்டு களிக்க தொடங்கியுள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழ், சிவாங்கிக்கு அடுத்ததாக, ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக வலம் வருபவர் சுனிதா. வட மாநிலத்தவரான இவரின் தமிழ் அவ்வளவு அழகு. சுனிதாவின் கொஞ்சும் தமிழுக்காகவே, இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதற்கும் மேலாக, இவரின் நடனத் திறமை நம்மை பிரமிக்க வைப்பதாக இருக்கும். தமிழ் சின்னத்த்ரை ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான சுனிதா, தனது சிறு வயது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது தற்போது, வைரலாகி வருகிறது.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘எனது அம்மா தான், எனக்கு காஸ்டியூம் டிசைனர். முடி அலங்காரம், மேக்கப் என ஒட்டு மொத்தத்தையும் அவரே எனக்கு செய்துவிடுவார். என் காஸ்டியூமில் உள்ள டிசைன்கள் பெரும்பாலவற்றை அவரே சுயமாக டிசைன் செய்வார்’ என குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும், சுனிதாவின் சிறு வயது புகைப்படத்தையும், தாய் மீது கொண்ட அவரின் அன்பையும் சிலாகித்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil