விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரெட் டிடி… லாக்டவுனில் செய்யும் வேலை இதுதான்!

பர்சனல் வாழ்க்கை ஆயிரம் விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் டிடி முகத்தில் அந்த சிரிப்புக்கு மட்டும் பஞ்சமே இருக்காது

By: Updated: July 18, 2020, 02:17:00 PM

vijay tv dd instagram ddneelakandan : எப்போதுமே கூகுளில் அதிகமாக தேடப்படும் ஆங்கர் லிஸ்டில் டிடிக்கு தான் முதலிடம்.

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தற்பொழுது சினிமாவிலும் நடித்து வருகிறார். சிறு சிறு வேடத்தில், பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவி தான் பல பிரபலங்களை வளர்த்து விட்டது இவரையும் சேர்த்து.

1999-ஆம் ஆண்டு சின்னத்திரையில் கால் பதித்த திவ்யதர்ஷினி. விஜய் டிவியில் ‘உங்கள் தீர்ப்பு’ நிகழ்ச்சியின் மூலம் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகமானார். 2002-ஆம் ஆண்டு ராஜ் டிவியில் கே.பாலசந்தரின் ‘ரெக்க கட்டிய மனசு’ சீரியலிலும் நடித்துள்ளார்.

இவருக்கு, ‘காஃபி வித் டிடி’ ஷோ மூலம் மிகப்பெரிய ரீச் கிடைத்தது. அதன்பின் வெள்ளித்திரையில் ‘நள தமயந்தி’, ‘விசில்’, ‘பவர் பாண்டி’, ‘சர்வம் தாளமயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது 20 ஆண்டுகாலபணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.டிடியின் தனிப்பட்ட பர்சனல் வாழ்க்கை ஆயிரம் விமர்சனங்களை சந்தித்திருந்தாலும் டிடி முகத்தில் அந்த சிரிப்புக்கு மட்டும் பஞ்சமே இருக்காது. அவர் மட்டுமில்லை தன்னுடன் இருப்பவர்களை எப்போதுமே சந்தோஷமாக வைத்திருப்பார். இந்த ஒரு காரணம் மட்டுமில்லை டிடியின் பேச்சில் இருக்கும் ஈர்ப்பு அப்படி ஒரு மேஜிக். ஈஸியாக அனைவரிடமும் ஒன்றி விடுவார்.

 

சிறிய இடைவெளிக்கு பின்னர் விஜய் டிவியில் ‘என்கிட்ட மோதாதே 2 ‘என்ற நிகழ்ச்சி மூலம் மீண்டும் தொகுப்பாளினியாக களமிறங்கினார். டிடி. இதுவரை தொகுப்பாளினியாகும், நடிகையாக இருந்த டிடி கேரள ரொமான்ஸ் ஸ்டார் டொவினோ தாமசுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் பாடலில் கூட ரோமான்ஸில் அசத்தி இருந்தார்.

 

View this post on Instagram

 

Think n Tell …. @camerasenthil ???? #sareelove

A post shared by Dhibba????Dance all The Way (@ddneelakandan) on

இப்போது லாக்டவுன் காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கின்றனர். வீட்டில் பொழுதை கழிக்க டிடி கையில் எடுத்திருப்பது வெப் சீரீஸ்களை பார்ப்பது தான். அதுமட்டுமில்லை அடிக்கடி கிளாமர் ஃபோட்டோ ஷூட்டும் நடத்தி வருகிறார். சமீபட்தில் கூட உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான Monety hiest என்ற வெப் தொடர் குறித்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வீட்டிற்குள் இருந்த படி க்யூட் போட்டோக்களை இன்ஸ்டாவில் தட்டிவிடுவது டிடி நியூஸ் ஸ்டைல்.

ஒரு பக்கம் ஷூட்டிங்… மறுப்பக்கம் ஆராய்ச்சி படிப்பு.. சீரியல் ஆனந்தி ஆல்வேஸ் பிஸி!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Vijay tv dd instagram ddneelakandan vijay tv dhivya dharshini koffee with dd hotstar208142

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X