Actress Alya Manasa Viral Photos Tamil News : ‘சமீபத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஆல்யா மானசாவா இது’ என்கிற அளவிற்கு முழு டிரான்ஸ்ஃபர்மேஷன் கொடுத்து போட்டோஷூட் நடத்தியிருக்கிறார் விஜய் டிவி புகழ் ஆல்யா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா எனும் கதாபாத்திரம் மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தவர் ஆல்யா மானசா. அதே தொடரில் அவரோடு இணைந்து நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்துக் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
View this post on Instagram
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா – சஞ்சீவ் தம்பதிக்கு ஐலா சையத் எனும் அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு குண்டான ஆல்யா மானசா கடுமையான உடற்பயிற்சிகளை செய்து மிகவும் குறைந்த நாள்களிலேயே உடல் எடையைக் கணிசமாகக் குறைத்தார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து தற்போது ராஜா ராணி சீசன் 2-ல் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஆல்யா, சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். மாடர்ன் மற்றும் பாரம்பரிய தோற்றத்தில் வெவ்வேறு உடையணிந்து ஆல்யா பதிவிடும் அனைத்து புகைப்படங்களும் வைரல் ஹிட். ஒவ்வொரு புகைப்படத்திற்கான கமென்ட்டிலும் ‘இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவா?’ என்கிற கேள்வி எழாமலில்லை.
View this post on Instagram
மெஜந்தா மற்றும் பிங்க் வண்ணங்களில் பாவாடை தாவணி செட் அணிந்து கொஞ்சம் அதிகப்படியான மேக்-அப் என்றாலும் சூப்பர்கியூட் என்று தங்கள் கமென்ட்டுகளை குவிக்கின்றனர் ரசிகர்கள். மஞ்சள் நிற ஸ்கர்ட் மற்றும் க்ரீம் வண்ண டாப் அணிந்து டீனேஜ் பெண் போன்ற தோற்றம் தரும் புகைப்படம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“