Advertisment

தாறுமாறு ஷாப்பிங்.. காரணம் இதுதான்.. ஹூசைன் மணிமேகலை லேட்டஸ்ட் வீடியோ!

மணிமேகலையும், ஹூசைனும் சமீபத்தில் பெங்களூருக்கு டூர் சென்ற வீடியோக்களை சீரிசாக வெளியிட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Manimegalai Hussain

Vijay TV Fame Manimegalai Bengaluru shopping video went viral

சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில், மணிமேகலை தனது பலநாள் நண்பரும், காதலருமான ஹூசைனை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்து கொஞ்ச நாட்களில் அவர் சன் மியூசிக்கில் இருந்து விலகினார்.

பிறகு விஜய் டிவியில் எண்ட்ரி ஆன மணிமேகலை’ கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அவரது படபட பேச்சு ரசிகர்களுக்கு பிடித்தது. இப்போது மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 3-ல் கலந்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே மணிமேகலை, ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ளார். அதில்’ இவர் சமைக்கும் போது குக்கர் வெடித்த வீடியோ பயங்கர வைரலாகியது.

இந்நிலையில் மணிமேகலையும், ஹூசைனும் சமீபத்தில் பெங்களூருக்கு டூர் சென்ற வீடியோக்களை சீரிசாக வெளியிட்டு வருகின்றனர். அந்த லிஸ்டில் இப்போது புது வீடியோவும் சேர்ந்துள்ளது.

பெங்களூரு எம்.ஜி.ரோடுக்கு சென்ற மணியும், ஹூசைனும் அங்கு காரை பார்க் செய்துவிட்டு, அங்குள்ள ஸ்கெட்சர்ஸ் கடைக்கு சென்று, இருவருக்கும் செருப்பு வாங்கினர். அப்போது தான் மணிமேகலை எல்லா கலெக்‌ஷனும் முதல்ல பெங்களூருவுக்கு தான் வருது. அப்புறதான் சென்னைக்கு வருது.. உங்களுக்கு புது கலெக்‌ஷன் வேணும்னா நேரமெல்லாம் பாக்காதீங்க.. நேரா கிளம்பி பெங்களூரு வந்துருங்க என சொல்கிறார்.

பிறகு அடிடாஸ் ஷாப்பிங் சென்டருக்கு சென்று  ஹூசைன்’ பேக் நிறைய ஷூ, ஆடைகள் எல்லாம் வாங்கினர். இருவரும் காருக்கு வரும்போது, இரண்டு கடைக்கு போனதுக்கே, இப்படி கார் நிரம்பிடுச்சே என மணி சொல்கிறார்.

ஆனாலும் இருவரும் ஷாப்பிங்கை விட்ட பாடில்லை. எப்போ பாத்தாலும் நிறைய பேக், டிரஸ்னு தண்டசெலவு பண்றாங்கனு உங்களுக்கு தோனும்.. ஆனா, அப்படி இல்லை, வேலை சம்பந்தமா  சில விஷயங்கள் தேவைப்படும். இது எல்லாமே எங்களுக்கு அத்தியாவசியமா இருக்கிறதுனால தான், அடிக்கடி ஷூட் போறோம். யூடியூப் வீடியோஸ் பண்றோம்.. ஒருவாட்டி போட்ட டிரெஸ இன்னொரு வாட்டி போட முடியாது. நம்மள நம்பி ஒரு நாளு பேரு வீடியோ பாக்குறாங்கனா, அந்தளவுக்கு நம்மள அழகா காட்டிக்கணும். அதுக்காக மட்டும் தான்.

பிறகு, அங்கிருந்த சில பசங்க மணிமேகலையை பாத்த உடனேயே, செல்ஃபி எடுக்க வர, அவர்களையும் விட்டுவைக்காமல் வீடியோ எடுத்து, சேனலை சப்ஸ்கிரைப் செய்ய சொல்கிறார் மணிமேகலை.

பிறகு அங்கிருந்து வேறொரு இடத்துக்கு ஷாப்பிங் செல்ல முடிவு செய்த மணிமேகலையும், ஹூசைனும் ஆட்டோ எடுத்து, கமர்ஷியல் ஸ்ட்ரீட் எனும் இடத்துக்கு சென்றனர். ஆட்டோ சிக்னலில் நிற்கவும், பக்கத்து காரில் இருந்தவர்கள், மணிமேகலை வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டு, அவரிடம் பேச, அவர்களையும் தங்கள் வீடியோவில் காட்டுகின்றனர்.

அங்கிருந்து துணிக்கடைகளில் ஏறி இறங்கி ஷாப்பிங் செய்துவிட்டு, வெளியே வர இரவு ஆகிவிட்டது. பிறகு அங்குள்ள ஹோட்டலுக்கு சென்று மணியும், ஹூசைனும் நூடுல்ஸ் சாப்பிட்டு, மறுபடியும் ஹூசைனுக்கு டிரெஸ் வாங்கிய பிறகு ஆட்டோவில் ஏறி கார் இருக்கும் இடத்துக்கு சென்று மறுபடியும் நாளைக்கு ஷாப்பிங் செய்யனும் என வீடியோவை முடிக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment