அழுகி போன கத்தரிக்காய்.. தீபாவளிக்கு கொடுத்த அதிரசம்.. இப்படி ஒரு ஃபிரிட்ஜ் டூர் நீங்க பாத்திருக்க மாட்டீங்க!

சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-இல் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டனர். அதில், இந்த ஜோடி அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றது.

சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-இல் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டனர். அதில், இந்த ஜோடி அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றது.

author-image
WebDesk
New Update
Vijay TV Fame Sarath

Vijay TV Fame Sarath Fridge Youtube Video Viral

விஜய் டிவியையும், ரியாலிட்டி ஷோக்களையும் பிரிக்க முடியாது.

விஜய் டிவியின் பலமே அந்த சேனலில் பணியாற்றும் காமெடியன்கள் தான். மற்ற டிவி சேனல்களுடன் ஒப்பிடுகையில் விஜய் டிவியில் வரும் காமெடியன்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கின்றனர். இன்னும் சொல்ல போனால், மற்ற சேனல்களும், அவர்களை வைத்துதான் பல ஷோக்களை நடத்துகின்றனர்.

Advertisment

அதற்கேற்ற மாதிரி விஜய் டிவியும், காமெடியன்களை ஒரே நிகழ்ச்சியுடன் ஓரம் கட்டாமல், சீரியல், ரியாலிட்டி ஷோ என தாங்கள் ஒளிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளிலும் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.

அப்படி சில காமெடியன்கள் தங்கள் அதீத திறமை மூலம், வெள்ளித்திரையிலும் கால்பதித்து பிரகாசித்து வருகின்றனர்.

அந்தவகையில் சரத், கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்குள் அடியெடுத்து வைத்தார்.

Advertisment
Advertisements

அதில் சரத்தும், தீனாவும் சேர்ந்து செய்த காமெடி  அட்டகாசங்கள் பலரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. குறிப்பாக சரத் மொட்டை ராஜேந்திரன் போலவே, மொட்டை மண்டையுடன், தொண்டைக் கட்டிய குரலில் பேசுவது அவரின் தனிச்சிறப்பு.

அதன்பிறகு, தீனா பட வாய்ப்புகள் கிடைத்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார். இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் தோன்றுவார்.

அவருடன் இருந்த சரத், விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை சீசன் 3-இல் சரத் மற்றும் அவரது மனைவி கிருத்திகா கலந்து கொண்டனர். அதில், இந்த ஜோடி அனைத்து டாஸ்க்குகளிலும் அசத்தி, பட்டத்தை வென்றது.

பல டிவி பிரலங்களை போலவே சரத்தும் கோமாளி சரத் எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனலை வைத்துள்ளார். அதில் சரத்தும், கீர்த்திகாவும் சேர்ந்து’ அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அடிக்கடி வீடியோ எடுத்து பதிவேற்றி வருகின்றனர்.

அப்படி அவர்கள் பகிர்ந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகியுள்ளது. பிரபலங்கள் அனைவரும் தங்கள் வீடு, கிச்சன், மாடித்தோட்டம் என டூர் வீடியோக்கள் போவது இப்போது டிரெண்டாகி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த ஃப்ரிட்ஜ் டூர்.

மைனா, ஷிவானி, அர்ச்சனா என பலரும் ஃபிரிட்ஜ் டூர் வீடியோக்களை போட்டுள்ளனர். அதில் இப்போது சரத்தும் இணைந்துள்ளார். ஆனால் இது வழக்கமாக நீங்கள் பார்க்கும் ஃப்ரிட்ஜ் டூரை போல இருக்காது. வீடியோ தொடங்கும் போதே சரத் டிஸ்க்லேய்மர் கொடுத்து விடுகிறார். எங்க ஃபிரிட்ஜில 90 நாள் வரைக்கும் வச்சது வச்சமாதிரியே இருக்கும். கெட்டு போகக் கூடாதுனு ஃபிரிட்ஜில வைப்பாங்க.. ஆனா ஃபிரிட்ஜில வச்சு கெட்டுப்போனதை பாருங்கனு” ஃபிரிட்ஜை காட்டுகிறார்.

பிரிட்ஜில் காலியான பொருட்களின் கவர்களை எல்லாம் தூரப்போடாமல் கீர்த்தி அப்படியே வைத்திருப்பதை ஒவ்வொன்றாக சரத் எடுத்துக் காட்டுகிறார். பல நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் பழைய காய்கறி, காய்ந்து போன எலுமிச்சை, பூத்து போய் இருக்கும் கறிவேப்பிலை, தீபாவளிக்கு கொடுத்த அதிரசம், அழுகி போன கத்தரிக்காய் என ஏதோ புதையலை எடுப்பது போல சரத், ஒவ்வொன்றாக ஃபிரிட்ஜில் இருந்து எடுக்கிறார்.

இத்தனைக்கும் ஃபிரிட்ஜ் டூர் போடலாம் என சரத் சொன்னதும் கீர்த்தி உடனே சுத்தம் வேற செய்திருக்கிறார். சுத்தம் செய்த ஃபிரிட்ஜை இந்த நிலைமையில் இருக்கே..

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் இதுதான்யா ஒரிஜினல் ஃபிரிட்ஜ் டூர்.. வேற லெவல் டூர் என கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: