Vijay Tv fame Sunita Birthday Celebration Viral Video : வட இந்தியாவிலிருந்து சென்னை வந்து, நடனம், நடிப்பு, நகைச்சுவை எனப் பல வழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் சுனிதா, தற்போது அவருக்கென்று தனிப்பட்ட சேனல் ஒன்றையும் ஆரம்பித்து மக்களை சந்தித்து வருகிறார். உபயோகமாக இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் இவருடைய காணொளி என்டெர்டெயினாக இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்ட காணொளியைப் பதிவு செய்திருக்கிறார் சுனிதா.

சுனிதாவின் நெருங்கிய தோழியின் இன்ட்ரோவோடு ஆரம்பமாகிறது இந்த கொண்டாட்ட காணொளி. முதல் முதலில் சுனிதாவின் தங்கை நந்திதா இந்த சேனலில் தோன்றினார். “என் அக்காவிற்கு ஏராளமான சர்ப்ரைஸ் இருக்கு. ஒரு வில்லா வாடகைக்கு எடுத்து அதனை அழகாக டெகரேட் செய்து சர்ப்ரைஸ் பண்ண போறோம்” என்றபடி தங்கை நந்திதா சுனிதாவின் நண்பர்களோடு இணைந்து எல்லா வேலைப்பாடுகளையும் செய்திருக்கிறார்.

பிறகு, சுனிதாவின் கண்களை மூடியபடி அந்த சர்ப்ரைஸ் அறைக்கு அழைத்துச் சென்று, ரவுடி பேபி பாடலோடு தொடங்கியது அவர்களின் கொண்டாட்டம். “என்னுடைய வாழ்க்கையில் என் அக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது. அவள் இல்லாமல் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. அவள் முன்னெடுக்கும் எல்லா வேலைகளிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்றபடி தன்னுடைய வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார் நந்திதா.

கில்லி ஜெனிபர், தொகுப்பாளர் ரக்ஷன் ஆகியோர் இந்த கொண்டாட்டத்தில் சில தெரிந்த முகங்கள். “மொழி தெரியாத ஊரில் நடனம், நகைச்சுவை என கலக்கிக்கொண்டிருக்கும் நீ, இன்னும் மேலும் வளர வாழ்த்துகள்” என்றபடி ரக்ஷன் தன் வாழ்த்தைப் பதிவு செய்தார்.
பிறகு கேக் கட்டிங், பரிசுகள் கொடுப்பது, அனைவரும் தங்களின் வாழ்த்துகளை ஓர் கார்டில் எழுதிக் கொடுப்பது, நடனம் என ஃபன் மொமென்ட்டுகளாக இருந்தன. ‘கனமணி அன்போடு..’ பாடலை தன் வழக்கமான பாணியில் பாடிக் கொன்று மென்று கதறவிட்டார் சுனிதா. ஆனால், அதனை மிகவும் அழகாகவே பாடினார் நந்திதா. பிறகு அங்கே இருந்த புகைப்படங்கள் கலெக்ஷனை விவரித்து, அனைத்தையும் நினைவுகூர்ந்து இறுதியாக ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி’ என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுனிதா. இறுதியாக லேன்டர்ன் பறக்கவிட்டு, ‘எல்லோரும் நல்லா இருக்கவேண்டும்’ என்று வேண்டியபடி சுனிதாவின் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட காணொளி நிறைவடைந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil