பியூட்டி கியூட்டி பிரியங்கா! இப்படியெல்லாம் இவங்க மட்டும்தான் போஸ் கொடுக்க முடியும்!

விஜய் டிவியின் ஃபேமஸ் ஆங்கர் பிரியங்கா பியூட்டிஃபுல் கிளிக்ஸ்!

விஜய் டிவியின் ஃபேமஸ் ஆங்கர் பிரியங்கா பியூட்டிஃபுல் கிளிக்ஸ்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka

Vijay TV Fame VJ Priyanka Cute photos

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.

Advertisment
publive-image

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

publive-image
Advertisment
Advertisements

ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது, விருந்தினராக வந்த இசையமைப்பாளர் அனிரூத்திடம் உங்களுக்கு விஜய் டிவியில் பிடித்த ஷோ எது என மாகாபா-வும், பிரியங்காவும் கேட்டனர்.

publive-image

அப்போது அனிரூத் ஸ்டார்ட் மியூசிக் சொன்ன உடனே பிரியங்கா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அப்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 சீக்கிரமா ஆரம்பிங்க என விஜய் டிவியிடம் கேட்டுக் கொண்டார்.

publive-image

பிறகு, பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல, யாருமே எதிர்பாராதவிதமாக, மாகாபா ஸ்டார் மியூசிக் சீசன் 3யை தொகுத்து வழங்கினார். இது பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

publive-image

இப்போது பிரியங்கா, மாகாபா-வுடன் சேர்ந்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

publive-image

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும்.

publive-image

இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

publive-image

போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணுராதா வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார்.

publive-image

அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.

publive-image

பிரியங்கா எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். அதில் அடிக்கடி தன்னுடைய படங்கள், போட்டோஷூட் என பலவற்றையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: