/tamil-ie/media/media_files/uploads/2020/08/4d9332e8ee57419f2d62facdc1a22217-24.jpg)
vijay tv gabriella instagram gabriella charlton
vijay tv gabriella instagram gabriella charlton : தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார் கேப்ரில்லா. ஞாபகம் இருக்கா? அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
தற்போது இவர் கொஞ்சம் உடல் எடை கூடி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.
பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குட்டிப் பொண்ணு கதாபாத்திரங்களில் நடித்து நம் அனைவரையும் கவர்ந்து வந்ததை தொடர்ந்து தற்போது சமூக வலைதளங்களில் புகைப்ப்டங்கள், ஃபோட்டோ ஷூட் மூலம் கலக்கி வருகிறார்.
வெறும் 20 வயது மட்டுமே பூர்த்தியான கேப்ரில்லா தற்போது வளர்ந்து வரும் நடிகையாக கலக்குகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் சமத்துப் பொண்ணாக நடித்திருந்த கேப்ரில்லாவை ரசிகர்கள் பார்த்து ஷாக் ஆகியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.