/tamil-ie/media/media_files/uploads/2019/10/sachin-30.jpg)
vijay tv jacqueline photos
vijay tv jacqueline photos :விஜய் டீவியில் வீ.ஜேவாகும் முன்னர் அதே சேனனில் ஒளிபரப்பப்பட்ட கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் நடித்தவர் ஜாக்லின். விஜே என்றால் நல்ல வசீகர தோற்றத்துடன் நல்ல குரல் வளமை உள்ளவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என விதியை மாற்றி தனது தனித்துவமான குரலாலே ரசிகர்களை கவர்ந்தார் ஜாக்லின்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் ஜாக்லின் குரல் அனைத்து வீடுகளிலும் ஒலிக்க தொடங்கியது. சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் B.Sc விசுவம் கம்யூனிகேஷன் கரசில் படித்துக் கொண்டே ஜாக்லின் பார்ட் டைம்மாக ஆங்கரிங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
இவரை கலாய்க்காதே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களே இல்லை. தாடி பாலாஜி தொடங்கி கோபிநாத், ராமர் கேங்க், மா.கா.பா என அனைவரும் ரவுண்ட் கட்டிக் கொண்டு ஜாக்லினை ஓட்டுவார்கள். ஆனால் அதை எல்லாத்தையுமே ஜாலியாக எடுத்துக் கொண்டு விஜய் டிவியின் வாலு பெண்ணாக வலம் வந்தார். இப்போது ஜாக்லின் சீரியலில் ரொம்ப பிஸி.
நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படத்தில் தங்கையாகவும் நடித்து பெரிய திரைக்கும் முகத்தை காட்டி விட்டார். மேக்கப்பில் சற்றும் வித்யாசமாக தெரியும் ஜாக்லின் உண்மையில் டஸ்கி ஸ்கின்னில் மிகவும் அழகாக இருப்பார். கல்லூரி காலங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை இங்கே பாருங்கள் ஷாக் ஆயிடூவீங்க.
சின்னத்திரை வட்டாரத்தில் ஜாக்லின் பற்றி அடிக்கடி பேசப்படும் தகவல் இதுதான். அம்மா, தம்பி மீது அளவுக்கு அதிகமான பாசத்தை வைத்திருக்கும் ஜாக்லின் உருவ கேலி கிண்டல்கள் குறித்து ஒருபோதும் கவலையடைந்து மூட் அவுட் ஆனதே இல்லையாம். இதற்கே தனி கட்ஸ் வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.