Advertisment

டான்சர் வீடுன்னு தெரியணும்னு இந்த பெயின்டிங் - சுனிதா ஹோம் டூர் ஃபன்!

Vijay Tv Jodi no 1 Sunitha Viral Youtube Video Tamil News எனக்கு மிகவும் பிடித்த இடம் இந்த பால்கனி தான். புல்விரிப்பு, இரண்டு குதிரை சிலைகள், புத்தா, சைம், ரோட்டுல வாங்கின மூங்கில் நாற்காலி என பிடித்தமான செட் அப்பை போட்டுவிட்டேன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay Tv Jodi no 1 Sunitha Viral Youtube Video Tamil News

Vijay Tv Jodi no 1 Sunitha Viral Youtube Video Tamil News

Vijay Tv Jodi no 1 Sunitha Viral Youtube Video Tamil News : 'கெட் தி மேன் வித் பிளான் ரைட் ஹியர்' என மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரீட்சையமான பாடலை நடனத்துடன் பாடிக்கொண்டே என்ட்ரி கொடுத்த ஜோடி நம்பர் ஒன் சுனிதாவின் வீட்டைதான் இன்று யூடியூப் ரிவ்யூவில் பார்க்கப்போகிறோம். வழக்கம்போல அவருடைய அட்ராசிட்டி இந்த காணொளியிலும் நூறு சதவிகிதம் உண்டு. அதனால்தான் டாப் 2 ட்ரெண்டிங்கில் இந்த வீடியோ உள்ளது.

Advertisment
publive-image

"குட்டியான வீடோ பெருசான வீடோ, இருக்குற இடத்தை அழகா வெச்சுக்கணும். அதுதான் முக்கியம். இந்த வீட்டுக்கு வந்தே ரெண்டு மாசம்தான் ஆகிறது. ஆனால், இங்கு இருக்கும் சோபா என்னுடன் பல வருடங்களாகப் பயணித்து வருகிறது. கறுப்பு நிறம் என்பதால் அழுக்கு தெரியாது. என்றாலும், எனக்கு பலப்பலனு ஜிங்குச்சா நிறங்கள்தான் அதிகம் பிடிக்கும்.

publive-image

"இது ஒரு டான்சர் வீடுன்னு தெரியவேண்டாமா? அதனால்தான் ஒரு பெண் டான்சர் உருவத்தை பெயின்ட் பண்ணிவிட்டேன். அடுத்தது அனைவரும் என்னிடம் ஃப்ரிட்ஜ் டூர் போடச்சொல்லி கேட்கிறீர்கள். என்னிடம் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஆனால், அதனுள் ஒண்ணுமே இல்லை. உங்களுக்காகவே எதையாவது வாங்கி வைத்து ஒரு வீடியோ போடுகிறேன்".

publive-image

அடுத்ததாக, தன் வீட்டில் இருக்கும் அவார்ட் டிராஃபிக்கள், புகைப்படங்கள், டிவி, சின்ன சின்ன பொம்மைகள், சிறிய கமாக்கியா கோவில் வடிவமைப்புகளை காண்பித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் ரீல்ஸ் வீடியோ பண்ணும் இடம், சமையலறை, தங்கை அறையின் கதவு உள்ளிட்டவற்றைக் காண்பித்துவிட்டு, தனக்கு மிகவும் பிடித்த பால்கனிக்கு கூட்டிச் சென்றார். அப்படியே தன் வீட்டை கவனித்துக்கொள்ளும் ஜெயலட்சுமி அக்காவைக் காட்ட மறக்கவில்லை சுனிதா.

publive-image

"ரொம்ப அழகா இருக்கே என்று போட்டோஃப்ரேம் ஒன்று வாங்கினேன். ஆனால், அதில் வைப்பதற்கு புகைப்படங்கள் இல்லை. அதனால், அப்படியே விட்டுவிட்டேன். இப்போ ஊருக்கு போறப்போ கண்டிப்பா புகைப்படங்கள் இதற்காகவே எடுக்கணும் என்று முடிவு செய்திருக்கிறேன். அடுத்து எனக்கு மிகவும் பிடித்த இடம் இந்த பால்கனி தான். புல்விரிப்பு, இரண்டு குதிரை சிலைகள், புத்தா, சைம், ரோட்டுல வாங்கின மூங்கில் நாற்காலி என பிடித்தமான செட் அப்பை போட்டுவிட்டேன்.

அடுத்து என்னுடைய பெட் ரூம். எனக்கு குப்பை இருந்தால் பிடிக்காது. அதனால், இங்கு நிறையக் குட்டி குட்டி டஸ்ட் பின் வைத்திருப்பேன். பிறகு என்னுடன் சின்ன வயதிலிருந்தே பயணிக்கும் மிக்கி பொம்மை இது. அப்புறம் இதுதான் என்னுடைய அலமாரி. வெளியில் நல்லா இருக்கும் ஆனால், உள்ளே துணிதான் இல்லை. இந்த அறையை எனக்கு மிகவும் பிடித்த பர்பிள், லைலாக்  அலங்கரித்துவிட்டேன். அதேபோல பெரிய பட்டாம்பூச்சி பெயின்டிங்கால் மேலும் அலங்கரித்துவிட்டேன். அப்புறம், இந்த பல்ப் இந்த வீடியோ எடுப்பதற்காகவே வாங்கினேன்" என்பதோடு அந்த சின்ன பல்பை காட்டி நிறைவு செய்கிறார் சுனிதா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sunitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment