/tamil-ie/media/media_files/uploads/2020/06/5-1.jpg)
vijay tv mahabharat
vijay tv mahabharat : இந்தியாவே லாக் டவுனில் அடைப்பட்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு டிவி சேனலும், ரசிகர்களை கவர, வித விதமான புதுப்படங்களையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
அந்த வகையில், விஜய் டிவியில் மகாபாரதம் தொடரை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. மகாபாரதம் சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகியது.வெகு ஜன மக்கள் பார்த்து ரசித்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலைத்தான்.
அப்படி இருந்த முல்லை தான் இப்ப எங்கையோ போயிட்டாங்க! நம்ப முடியுதா?
அந்த வகையில் விஜய் டிவி வெற்றி கண்டது. இப்போது மறு ஒளிபரப்பில் மகாபாரதம் தொடரை தினமும் ஒளிபரப்பி வருகிறது. இப்போதும் மக்கள் அதே ஆர்வத்துடன் மகாபாரதம் சீரியலை பார்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லை முதல் ஒளிப்பரப்பின் போது எப்படி கிருஷ்ணனை, அர்ஜூனனை ரசித்தார்களோ அதேபோல் இன்று வரை அவர்களை வாட்ஸப் டிபியில் வைத்து கொண்டாடி வருகின்றனர்.
vijay tv mahabharat :அப்படிப்பட்ட மகாபாரத ஃபேன்கஸ்களுக்காகவே இந்த ஸ்பெஷல் கேலரி.
ரீல் vs ரியல் மகாபாரத கேரக்டர்களளின் ஃபோட்டோ கேலரியை ரசிக்கலாம் வாங்க.
- அர்ஜூனன்: பாலிவுட் படங்களில் நடித்த ஷாகீர் அர்ஜூனனாக கலக்கி இருந்தார்.இவர் வழக்கறிஞரும் கூட.
- துரியோதன்: அர்பித் ரங்கா துரியோதடன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தி இருந்தார்.
3. துச்சலா: பாலிவுட் குழந்தை நட்சத்திரம் ஹசனூர் கவுர் துச்சலாவாக நடித்திருந்தார். கெளரவர்களின் செல்ல தங்கை.
4. திரெளபதி : இந்தி சீரியல் நடிகை பூஜா சர்மா இந்த ரோலில் நடித்தார்.
5. கர்ணன்: 2014 ஆம் ஆண்டு நடந்த ஆணழகன் போட்டியில் 50 ஆவது இடத்தை பெற்றிருந்த ஹாம் சர்மா தான் கர்ணனாக நடித்திருந்தார்.
6. கிருஷ்ணன் : பாலிவுட் ஃபேமஸ் மாடல் சவுராம் ராஜ் கிருஷ்ணன் ரோலில் பெண்களை கவர்ந்திழுத்தார்.
8. சிவன்: பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருந்த மோகித் தான் மகாபாரத்தில் சிவன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.