விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்தார் ஹேமா. பின்னர் பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார். மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.
Advertisment
ஆனால் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இதில் ஜீவாவின் மனைவியாக மீனாவாக, ஹேமா நடிக்கிறார்.
இந்நிலையில் ஹேமா புதிதாக மேக்கப் போட ஆரம்பிக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து தன்னுடைய ஹேமா’ஸ் டைரீ யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
வீடியோவில் ஹேமா கூறிய மேக்கப் டிரிக்ஸ் இதோ; நம்மள நிறைய பேரு இப்போ வெளியே போறதுக்கே மேக்கப் போட ஆரம்பிச்சுட்டோம். அப்படி மேக்கப் போட ஆரம்பிக்கும் பெண்களுக்குத் தான் இந்த வீடியோ.
மேக்கப் கிளாஸ் போய் கத்துக்கிட்டாதான் மேக்கப் போட முடியும் இல்ல. உங்களுக்கு மேக்கப் பேட்டர்ன் தெரிஞ்சாலே போதும். பவுண்டேஷன் எவ்வளவு போடனும், அதை எப்படி பிளெண்ட் பண்ணனும்; ஐ மேக்கப் எப்படி போடனும் இதை மட்டும் தெரிஞ்சிகிட்டா போதும், நம்மளே மேக்கப் போட ஆரம்பிக்கலாம்.
நான் ஆரம்பத்துல மேக்கப் போடும்போது நிறைய தப்பு பண்ணிருக்கேன். இன்னைக்கு பேஸிக் மேக்கப்ல என்னென்ன பண்ணனும், என்னென்ன பண்ணக்கூடாதுனு பார்க்க போறோம் என்ற ஹேமா, தன்னுடைய முகத்தையே ஒரு எக்ஸ்பரிமெண்டாக மாற்றி ஒரு பக்கத்தில் என்ன செய்ய வேண்டும், இன்னொரு பக்கத்தில் என்ன செய்யக்கூடாது என்பதை பார்க்கலாம்னு கூறுகிறார்.
மேக்கப் போடுறதுக்கு முன்னாடி முதல்ல முகத்தை நல்ல கழுவனும். ஃபேஸ் வாஷ் பண்ண பிறகு, முகத்துக்கு மாய்ஸ்சரைசர் போடனும். ஆனா நிறைய மாய்ஸ்சரைசர் போட மாட்டாங்க. மாய்ஸ்சரைசர் ரொம்ப முக்கியம். இதுதான் மேக்கப் பிரொடக்ட்ஸூக்கும், நம்ம சருமத்துக்கும் இடையில ஒரு சுவர் மாதிரி இருந்து பாதுகாக்கும். நீங்க மேக்கப் போடலனாலும் தினமும் 2 முறை மாய்ஸ்சரைசர் யூஸ் பண்ணா, சருமம் மிருதுவா இருக்கும்.
அதேமாதிரி நிறைய பேரு ஐ ஷேட் போடும்போது, பிங்க் கலர் யூஸ் பண்ணுவாங்க. ஆனா, நியூட் ஷேட் தான் நல்லா இருக்கும். ஐபிரோஸ் போடும் போது நிறைய பேரு திக்கா அப்ளை பண்ணுவாங்க. ஆனா அப்படி பண்ணக்கூடாது.
இப்படி ஐலைனர், நோஸ் கட்டர், சிக் கட்டர், பிளஷ், லிப்ஸ்டிக் எப்படி யூஸ் பண்றது என்பது குறித்த பல விஷயங்களை ஹேமா அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோ இதோ!
&feature=youtu.be
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“