பிரணிகா தக்ஷு டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பிரதாப் ஜனாவின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கால் கிலோ காதல் குறும்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.
பின்னர் இந்திய அரசாங்கம் டிக் டாக் செயலியை தடை செய்த போது, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார். பிரணிகா அறம் தொலைக்காட்சியில், தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
உனக்கென்னபா யூடியூப் சேனலின் ஹலோ வெப் சீரிஸ், இனி ஒரு காதல் செய்வோம் மற்றும் வடசேரி ஆகிய படங்களிலும் பிரணிகா நடித்துள்ளார். இருந்தாலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது விஜய் தொலைக்காட்சி தான். பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் வினோத் பாபுவின் ஜோடியாக பங்கேற்று காமெடியில் அசத்தினார். இப்போது கனா காலங்கள் சீரியலில் பள்ளி மாணவியாக நடிக்கிறார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை மட்டும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் பிரணிகா கார்டிலியா சொகுசு கப்பலில் டூர் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொசுகு கப்பல் திட்டம் சென்னையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. கார்டிலியா’ என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துகிறது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் 2 நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலாத் திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படுகிறது.
data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
சமீபத்தில் விஜே மணிமேகலை, ஷிவாங்கி, ஸ்ரூதிகா, பவித்ரா ஜனனி ஆகியோர் இந்த சொகுசு கப்பலில் பயணம் செய்த வீடியோவை யூடியூப், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். அது பயங்கர வைரலானது.
மேலும் விஜய் டிவியின் பிரபலமான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஷூட் கூட இந்த கப்பலில் பிரம்மாண்டமாக நடந்தது
இந்நிலையில் இப்போது, பிரணிகா தக்ஷூ, இந்த கப்பலில் சுற்றுலா சென்ற படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“