Vijay Tv Priyanka Deshpande Viral Youtube Video Tamil News : எப்போதுமே கலகலப்பாகப் பேசி, தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலில் மக்களை என்டெர்டெயின் செய்து வரும் பிரியங்கா, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலையும் ஆரம்பித்து, அதிலும் நகைச்சுவை மழையில் நம்மை நனைத்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் அவர் அப்லோட் செய்த இனிப்பு சப்பாத்தி செய்வது எப்படி? என்கிற காணொளி, மாஸ் ஹிட். வீடியோ ஆரம்பம் முதலே சிரிக்கவைக்கத் தவறவில்லை. அப்படி என்ன ஸ்பெஷல் அந்த காணொளியில்?

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட லேசான நில அதிர்வுக்குக் காரணம், அந்தக் காணொளி எடுக்கும்போது பிரியங்கா குதித்ததால்தான் என்ற கனெக்ஷனிலேயே குபீர் சிரிப்பை வரவைத்துவிடுகிறார். பிறகுத் தன் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபியான இனிப்பு சப்பாத்தி எப்படிச் செய்வது என்பதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். அதனை செய்து காண்பித்தும் பிரியங்காவின் அம்மாதான். பிசைந்து வைத்த சப்பாத்தி மாவின் சிறிய சைஸ் உருண்டையின் நடுவில் சிறிதளவு சர்க்கரை வைத்து, பிறகு அதனை சப்பாத்தி போல் தேய்த்து, சுட்டு எடுத்தால் இனிப்பு சப்பாத்தி ரெடி.

எவ்வளவுதான் வகை வகையான ரெசிபிக்களை கற்றுக்கொண்டாலும், சப்பாத்தியை அழகிய வட்ட வடிவத்தில் தேய்த்து எடுக்க முடியவில்லை என்கிற கவலை ப்ரியங்காவிற்கு ஒருபுறம் இருக்க, இதில் சர்க்கரை மட்டுமல்லாமல், தேங்காய், வெல்லம் ஆகியவற்றையும் கலந்து செய்யலாம் என்கிற டிப்ஸை ப்ரியங்காவின் தாய் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

பிறகு பிரியங்காவும் சப்பாத்தி செய்து காண்பிக்க, அதுவும் வழக்கம்போல ஏடாகூடமாக வர, மீண்டும் அதனை எப்படி சரிசெய்யவேண்டும் என்பதை அம்மாவிடம் கேட்கச் சொல்லி எஸ்கிப் ஆனார். எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டியதாக இருக்கு! சுடசுட அம்மா சுட்டுக்கொடுத்த இனிப்பு சப்பாத்தியை சாப்பிட்டுக்கொண்டே மேலும் தன் தாயிடமிருந்து சில டிப்ஸ்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை, அதனோடு தேங்காய்த் துருவல், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை உள்ளிட்ட நட்ஸ் வகைகளை அரைத்துப் பொடி செய்து சர்க்கரைக்கு பதிலாக சேர்த்து இந்த சப்பாத்தி செய்யலாம். காய்கறிகள், பனீர், மஷ்ரும் உள்ளிட்டவற்றையும் மசாலாவாக செய்தும் இதே செய்முறையில் செய்து சாப்பிடலாம். இந்த மிகவும் சீரியஸான ரெசிபியை அனைவரும் முயற்சி செய்து பார்த்துவிட்டு, இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை அனுப்பச் சொல்லி பிரியங்கா கேட்டுக்கொள்வதோடு காணொளி நிறைவு பெறுகிறது. இப்போது வரை இந்தக் காணொளி 3 லட்சத்திற்கும் அதிகமாக வியூஸ்களை பெற்று, ட்ரெண்டிங் 3-ம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil