ஒரு முறை குக்வித் கோமாளியில் பிரியங்கா செய்த நுங்கு பாயா, நீங்களும் வீட்டில் செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் தண்ணீர்
கொஞ்சம் உப்பு
5 நுங்கும்
3 ஸ்பூன் எண்ணெய்
2 பட்டை
1 கிராம்பு
ஒரு பிரியாணி இலை
2 ஏலக்காய்
1 கொத்து கருவேப்பிலை
3 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
1 வெங்காயம்
கால் கப் தேங்காய்
10 முந்திரி
1 ஸ்பூன் கசகசா
1 ஸ்புன் சோம்பு
1 பட்டை
1 ஏலக்காய்
2 கிராம்பு
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் உப்பு சேர்த்து கிளரவும். இதில் நுங்கை சுத்தம் செய்து சேர்த்து 5 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளரவும். ஒரு மிக்ஸியில் தேங்காய், முந்திரி, கசகசா, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து அரைத்துகொள்ளவும். இதை அடுப்பில் சேர்த்து கிளரவும், கொசஞ்ம் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம். தொடர்ந்து நுங்கை சேர்த்து கிளரவும். கடைசியாக அடுப்பை அணைத்த பிறகு பாயாவில் எலுமிச்சை சாறை சேர்த்து கிளரவும்.