இப்படி ஒரு முறை முருங்கைக்காய் பூரி செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
15 முருங்கைக்காய்
3 கப் கோதுமை மாவு
உப்பு
பொறிக்கும் அளவு
எண்ணெய்
1 ஸ்பூன் சீரகம்
செய்முறை: முருங்கைக்காய்யை நன்றாக வேக வைக்கவும். தொடர்ந்து அதன் சதைப் பகுதியை பிரிந்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சேர்த்து, சதைப்பகுதியை சேர்த்து, சூடான தண்ணீர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து இதில் சீரகம் சேர்த்து பிசையவும். வழக்கம் போல் பூரி தேய்த்து, பொறித்து எடுக்கவும்.