scorecardresearch

ஒவ்வொரு நாளும் அழகு கூடும் விஜே பிரியங்கா. இதுதான் காரணம்.. அவங்களே சொன்ன உண்மை!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார்.

VJ Priyanka
Vijay TV Priyanka revealed secret behind her beauty video viral

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார்.

பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது, விருந்தினராக வந்த இசையமைப்பாளர் அனிரூத்திடம் உங்களுக்கு விஜய் டிவியில் பிடித்த ஷோ எது என மாகாபா-வும், பிரியங்காவும் கேட்டனர். அப்போது அனிரூத் ஸ்டார்ட் மியூசிக் சொன்ன உடனே பிரியங்கா மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அப்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 3 சீக்கிரமா ஆரம்பிங்க என விஜய் டிவியிடம் கேட்டுக் கொண்டார்.

பிறகு, பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல, யாருமே எதிர்பாராதவிதமாக, மாகாபா ஸ்டார் மியூசிக் சீசன் 3யை தொகுத்து வழங்கினார். இது பிரியங்கா ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தன்னுடைய நகைச்சுவையான பேச்சுத்திறமை மூலம், மாகாபா தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி அனைவருக்கும் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

இப்போது பிரியங்கா, மாகாபா-வுடன் சேர்ந்து ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், பிரியங்கா போட்டியாளர்களிடம் பேசுவதை செம ஜாலியாக இருக்கும். இதில் போட்டியாளர்களின் பாடல்களை விட, பிரியங்காவும், மாகாபாவும், சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தான் பார்வையாளர்களுக்கு ரொம்ப பிடிக்கும். போட்டியாளர்கள் மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், நடுவர்களையும் பிரியங்கா விடமாட்டார். உன்னி கிருஷ்ணன் முதல் அணுராதா வரை எல்லாரையும் கலாய்த்து தள்ளுவார். அந்தளவுக்கு சூப்பர் சிங்கர் என்றாலே, பிரியங்காவும், மாகாபாவும் தான் என்றாகிவிட்டது.

இப்போது பிரியங்கா வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. எல்லாருமே கொஞ்ச நாளா நான் அழகாயிட்டே போறேன், இது எப்படி நடந்ததுனு கேட்குறீங்க.. இப்போ நான் அழகான பிரியங்காவ மாறிட்டு இருக்கேன். அது முக்கிய காரணம் வசந்த் கொடுக்கிற சிகிச்சைதான். 2.0ல கொடுக்குற முழு லேசர் சிகிச்சை நான் எடுத்துட்டு இருக்கேன். இது என்னோட 3வது சிட்டிங். சத்தியமா சொல்றேன், என்னோட முகம், உடம்பு, கையில எல்லாம் நிறைய மாற்றம் தெரியுது. அப்படியே பளபளன்னு மாத்தி விட்றாரு என்று பிரியங்கா பேசுகிறார்.

இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv priyanka revealed secret behind her beauty video viral