/tamil-ie/media/media_files/uploads/2021/02/New-Project-7.jpg)
vijay tv rakshan vj rakshan wife cook with comali
vijay tv rakshan vj rakshan wife cook with comali : கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தபோது தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸையும் தொடங்கிவிட்டார் தொகுப்பாளர் ரக்ஷன்.
விஜய் தொலைக்காட்சியில் பெண் தொகுப்பாளினிக்கு இணையாக ஆண் தொகுப்பளர்களும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் தற்போதைய விஜய் டிவி தொகுப்பாளராக வகையில் ஒருவர். தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷன் முதலில் ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். ஆனால், அவருக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது விஜய் டிவி தான். விஜய் டிவியில் இவர் கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். விஜய் டிவி மூலம் தான் ரக்ஷன் மக்கள் மத்தியில் பிரபலமானார்
ராஜ் டிவி, கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும், தனக்கான வெளிச்சம் கிடைக்காமல் இருந்தவருக்கு, இப்போது வெள்ளித்திரையின் வாசல் திறக்கப்பட்டிருக்கிறது. துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.
இவர், திருமணமாகாதவர் என்று தான் ரசிகர்கள் அனைவரும் நினைத்து இருந்தார்கள். அதனால் அவ்வப்போது ரக்ஷன் கிசுகிசுக்களிலும் சிக்குவது உண்டு.இந்நிலையில் ரக்ஷன் திருமணம் ஆனவர் என தெரியவந்ததால் ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகி இருக்கிறார்கள். ரக்ஷன் தன்னுடைய மனைவி போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். 10 வருடங்களுக்கு முன் அவர் தன் மனைவி உடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.