vijay tv ramar comedy vijaytv ramar: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் ராமர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’ என ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியைக் கலாய்த்து இவர் நடித்ததன் மூலம் ‘என்னம்மா’ ராமர் என்றே ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
Advertisment
அத்துடன், ‘ஆத்தாடி என்ன ஒடம்பீ’ பாடலை இவர் ஸ்டைலில் பாட, இப்போது அந்தப் பாடலை எல்லோரும் இவர் மாதிரியே பாட ஆரம்பித்து விட்டனர். இவரின் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா, ஆத்தாடி என்ன உடம்பு போன்ற வசனங்கள் இன்றளவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. இதனை பல சினிமாக்களில் உபயோகித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இவருக்காகவே விஜய் டிவி தனி தனி ஷோக்களை அறிமுகம் செய்தது. ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே டி.ஆர்.பியில் இடம் பிடித்தது. ”
Advertisment
Advertisements
ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து, ‘ராமர் வீடு’ என இவர் பெயரையே தலைப்பாக வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தியது விஜய் டிவி.டிவி மட்டுமின்றி, பல படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ராமர்.‘கோமாளி’, ‘சிக்ஸர்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
ஆணாக இருந்தாலும் பெண் வேடத்தில் அசத்துவர் ராமர். 20 வருடங்களாக சின்னத்திரையில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் ராமர் இப்போது பெரிய திரையிலும் முகம் காட்ட தொடங்கி விட்டார். கூடிய விரைவில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.
ராமரின் சொந்த ஊர், மதுரை பக்கத்துல மேலூர். மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில இருக்கிற நோயாளிகளை சந்தோஷப்படுத்துறதுக்கு அவ்வப்போது இலவசமாக சில காமெடி நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.இது பலருக்கும் தெரியாத தகவல்.உண்மையில் இதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும் பாஸ்.
வடிவேலு தான் ராமரின் ரோல் மாடல். ‘நாம எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் மத்தவங்களைச் சிரிக்கவைக்கிறது ஒரு கலை. அந்தக் கலை என்கிட்ட இருக்குன்னு நினைக்கும்போது பெருமையா இருக்கு. இன்னும் நிறைய பேரைச் சிரிக்க வைக்கணுங்குறதுதான் என் ஆசை’ என்று அடிக்கடி சொல்வாராம் ராமர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil