விஜய் டிவி ராமர். அறிமுகமே தேவைப்படாது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை. அந்த அளவுக்கு இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள். அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயகன், ரோபோ சங்கருக்கு அடுத்து ராமர் தான்.

இவருக்காகவே விஜய் டிவி தனி தனி ஷோக்களை அறிமுகம் செய்தது. ராமரை மையமாக வைத்து ‘ராமர் வீடு’ என்ற காமெடி நிகழ்ச்சி, சகள vs ரகள, ராமர் வீட்டு கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகள் ராமருக்காகவே டி.ஆர்.பியில் இடம் பிடித்தது. ” என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” “ஆத்தாடி என்ன உடம்பு” “போலீஸைக் கூப்பிடுவேன்” போன்ற வசனங்கள் ராமர் ரசிகர்களின் ஆல் டைல் ஃபேவரெட்.
ஆணாக இருந்தாலும் பெண் வேடத்தில் அசத்துவர் ராமர். 20 வருடங்களாக சின்னத்திரையில் தலைக்காட்டிக் கொண்டிருக்கும் ராமர் இப்போது பெரிய திரையிலும் முகம் காட்ட தொடங்கி விட்டார். கூடிய விரைவில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

ராமரின் ஸ்பெசாலிட்டியே ஹிட்டான பாடலை கலாய்ப்பது தான். தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம்பெற்ற பாடலை மரண கலாய் கலாய்த்து ராமர் வெளியிட்டிருந்த வீடியோ மில்லியன் பார்வையாளர்களை கடந்து அந்த வாரத்தில் யூடியூபில் ட்ரெண்ட் அடித்தது.
அதேசமயம், விஜய் டிவியில் ராமருக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை. எவ்வளவோ கலைஞர்கள் விஜய் டிவியில் இருந்தாலும், அவர்களால் ராமர் போல் ஒரு லீடிங் இடத்திற்கு வர முடியவில்லையே போன்ற கருத்துகளையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.
இந்நிலையில், விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் ராமர் வலுக்கட்டாயமாக முன்னிறுத்தப்படுகிறாரா? என்ற கேள்விக்கு சக கலைஞரான நாஞ்சில் விஜயன் முன்பு நாம் வைத்தோம். இதற்கு ஒரே வரியில் பதிலளித்து ஒட்டுமொத்த சர்ச்சைகளுக்கு அழகாய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
'அவர் எப்போதோ இந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும். இதுவே ரொம்ப லேட். இந்த இடத்திற்கு அவர் முழுவதும் தகுதியானவர்.'
ஆங்!! கெளம்பு கெளம்பு!!