அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சு ரவுண்டு மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் காமெடியன் ராமர். இவர் அந்த நிகழ்ச்சியில் சும்மா விருந்தினர்களை சிரிக்க வைக்க ஆடிய ஆத்தாடி என்ன உடம்பி பாட்டு பயங்கர வைரலாகி சினிமாவில் கூட வந்துவிட்டது. இவரது திறமையை பாராட்டி ராமர் வீடு என்ற பெயரில் தனி ரியாலிட்டி ஷோவையே விஜய் டிவி ஒளிபரப்பியது.
Advertisment
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராமர் ஒரு காமெடியன் மட்டுமல்ல. மதுரை சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ராமர் தற்போது சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டில் புதுமனை புகுவிழாவில் சக விஜய் டிவி காமெடியன்கள் தங்கதுரை, ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் மற்றும் செந்தில் கணேஷ் – ராஜலெட்சுமி தம்பதியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது எடுத்த வீடியோவை நாஞ்சில் விஜயன் தன்னுடைய மாடர்ன் மங்கி யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் விஜயன் பேசுகையில்; நம்ம ராமர் புதுசா மதுரையில பிரம்மாண்டமா ஒரு வீடு கட்டிருக்காருனு வீட்டுக்குள்ளே போகிறார். உள்ளே போனதும் ஒரு பெரிய ஹால். அடுத்து ஒரு பெட் ரூம், அங்க போனதும் ராமர் மனைவி நல்லி எலும்பு, மட்டன் குழம்பு, குடல் கூட்டு, ரசன், மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, முட்டை பனியாரம், குழி பணியாரம் என எல்லா சமையலையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
பிறகு விஜயன் இன்னொரு ரூமை காட்டினார். அப்படியே வேறொரு அறைக்கு போனா, அங்கே பழைய ஜோக் தங்கதுரை ஒரு சேரில் அமர்ந்திருக்கிறார். அப்படியே கிச்சனுக்குள் நுழைந்த விஜயன், கிச்சன் இல்லாம எந்த வீடுமே இருக்காது. இதுதான் ராமர் அண்ணன் புதுசா கட்டியிருக்க வீட்டோட கிச்சன். ரொம்ப பெரிய கிச்சன். என்னடா மதுரை வீடு இவ்வளவு ஸ்டைலா இருக்குனு நீங்க நினைக்கலாம், ஆனா வீட்டுல இருந்து அப்படியே வெளியே வந்தா அழகா வயல் இருக்குது என விஜயன் அந்த வயல் வெளிகளை காட்டுகிறார்.
பிறகு ரோபா ஷங்கர், தங்கதுரை, நாஞ்சில் விஜயன் ராமரை கட்டிபிடித்து வாழ்த்து தெரிவித்து அவர்களின் நிகழ்ச்சியை போலவே இந்த வீடியோவையும் கலகலப்பாக முடித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“