விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றான ஈரமான ரோஜாவே சில மாதங்களுக்கு முன் முடிந்தது. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.
இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.
விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அதில் அபிநயா பிரபல நீதிபதியின் மகள், அமெரிக்கா சென்று படித்தவர். தப்பு நடந்தால் தைரியமாக தட்டிக்கேட்கும் பெண். ஆனால் இவருக்கு இருக்கும் ஒரே குறை என்னவென்றால் அபிநயா ஒரு பழமைவாதி, மூடநம்பிக்கை கலாச்சாரங்களை நம்பக்கூடிய ஒரு பெண்.
அதனால் தான், தன் அனுமதி இல்லாமல், தன் கழுத்தில் தாலி கட்டியவனை காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுக்காமல், மஞ்சள் தாளி செண்டிமெண்டுடன் கல்லானாலும் கணவன் என்று வாழ்ந்து வருகிறார்.
அவளுடைய கணவனும் ஒரு லோக்கல் ரவுடி. அவனை அவர்கள் சொந்த வீட்டிலே மதிக்கமாட்டார்கள். இப்போது தெரிந்தோ, தெரியாமலோ அபிநயாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் வேறுவழியில்லாமல் அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்.
இப்போது அமெரிக்காவில் படித்த அபிநயா என்ன செய்ய வேண்டும்? அவளுடைய கணவனை திருத்தி, நல்லவனாக மாற்றி சமுதாயத்தில் நான்கு பேர் மதிக்கும்படியாக செய்ய வேண்டும். இதுதான் இந்த சீரியலின் களம்.
இந்த சீரியலின் புரோமோ வெளியான புதிதில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியது. தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கலாச்சாரத்துக்கும், குற்றத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பார்வையாளர்களை பின்நோக்கி சிந்திக்கத் வைக்கிறது என பலரும் புகார் கூறினர். ஆனால் இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த சீரியல் இன்றுவரை நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த சீரியல் ஹீரோயின் பவித்ரா ஜனனி தற்போது மணலி-க்கு டூர் சென்ற போட்டோக்களை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில்’ மணாலியில் என்னுடைய முதல் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களில் பவித்ரா ஜர்கின், குள்ளா, போன்ற குளிர்கால ஆடைகளை அணிந்து கொண்டு, பனிப்போர்வையில் பார்க்க செம ஜாலியாக இருக்கிறார்.
அதேபோல மற்றொரு போஸ்டில் பனிக்கட்டியில் கீழே விழுந்து விழுந்து விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“