/tamil-ie/media/media_files/uploads/2020/06/3-15.jpg)
Vijay Tv Serial Actress Shivani : விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனவர் ஷிவானி நாராயணன். தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வளவு குறுகிய காலத்திலேயே லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு ஷிவானிக்கு அமைந்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியம் தான்.
அதற்கு காரணமே, ஷிவானியின் அழகு மட்டுமில்லை ஆக்டிங் அண்ட் டான்ஸ் ஆடும் திறமையும் தான். ஷிவானியின் டிக் டாக், டப்மேஷ்கள் இணையத்தில் படு வைரல். விஜய் டிவி சீரியலான கடைக்குட்டி சிங்கம் தொடரில் அசீம் – ஷிவானியின் ஜோடி செம்ம ஹிட் அடித்தது. ஆனால் அந்த சீரியல் திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது, ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலேயே இருக்கும் ஷிவானி டான்ஸ் , டிக் டாக், கொரோனா விழிப்புணர்வு, வீட்டை சுத்தம் செய்தல் உள்ளிட்டவற்றை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
ஷிவாங்கியின் மிகப் பெரிய பலமே அவரின் இசைக்குடும்பம் தான்!
ஷிவானியின் சொந்த ஊர் சாத்தூர்.-ம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ஷிவானி, அதன் பிறகு சென்னைக்கு குடி பெயர்ந்திருக்கிறார். ஷிவானி சின்னத்திரைக்கு காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு டிக் டாக், டப்மேஷ் செய்துக் கொண்டிருந்தார். இதைப்பார்த்து தான் வாய்ப்பே அவருக்கு வந்ததாம்.
‘இரட்டை ரோஜா’ என்ற சீரியலில், அனு, அபி என இரட்டை வேடங்களில் நடித்து வரும் ஷிவானிக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ஃபேன்ஸ் ஃபாலோ. அவர் எந்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டாலும் லைக்ஸ்கள் அள்ளும். சமீபத்தில் கரீனாகபூரின் டான்ஸை அப்படியே ஆடி அசத்தி இருந்தார். அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார் ஷிவானி . அதும் ஹிட்ஸ் லைக் அண்ட் ஷேர் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.