vijay tv serial ponmagal vandhal meghna : விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழில் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட். கேரளத்து வரவான மேக்னாவை சீதா என்றால் அனைவருக்கு தெரியும். இந்த சீரியல் 2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.
Advertisment
தமிழில் கயல் படத்தில் மேக்னா நடித்திருந்தார். பரதநாட்டிய கலைஞரான மேக்னாவுக்கு நடிப்பு, நடனம் என்றால் கொள்ளை பிரியம். தற்போது பொன்மகள் வந்தால் சீரியலில் மேக்னா தான் லீட் ரோல். இந்த சீரியலும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது இவர்களின் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் நடிகைகள் சின்னத்திரையில் இவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
Advertisment
Advertisements
இந்நிலையில் மேக்னா தனது கணவரை கடந்த சில மாதத்திற்கு முன்னர் விவாகரத்து செய்து கொண்டார். நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார்.இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இந்நிலையில், மேக்னாவின் முன்னாள் கணவர் டான் டோனி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இதுக்குறித்து முதன்முறையாக மனம் திறந்த மேக்னா விவகாரத்துக்கு பின்பு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.
காதல் வதந்தி:
சீரியலில் மேக்னாவின் ஜோடியாக விக்கி என்பவர் நடித்து வருகிறார். இருவரது ஜோடிப் பொருத்தமும் நன்றாக இருப்பதாக வழக்கம்போல் வதந்தி பரவியது. இருந்தாலும் இருவரும் நல்ல நண்பர்கள் தான் எனவும், எங்களுக்குள் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எதுவுமில்லை எனவும் நடிகர் விக்கி சமீபத்தில் தெரிவித்திருந்தார்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil