இந்தியாவின் தூய்மையான டவ்கி நதி: சுனிதா 'மேகாலயா' வீடியோ
விஜய் டிவி பிரபலம் சுனிதா சமீபத்தில் தன் சொந்த பூமியான மேகாலயாவுக்கு சென்றார். அங்கு இந்தியாவின் தூய்மையான டவ்கி நதியில் சுற்றிப் பார்த்த போது எடுத்த வீடியோவை தன் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களிலேயே அனைவராலும் அறியப்பட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் கொண்ட மாநிலம் மேகாலயா. அதன் தலைநகரம் ஷில்லாங்.
Advertisment
மேகாலயா, வடக்கில் அஸ்ஸாம் மாநிலத்தையும் தெற்கில் பங்களாதேஷ் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.
இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வனப்பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகள் பல்லுயிர்ப்பெருக்க இயற்கைச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன. இந்த காடுகளுக்குள் பயணம் செய்வது உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு அற்புதமான அம்சங்கள் நிறைந்த காடு இது.
விஜய் டிவி பிரபலம் சுனிதா சமீபத்தில் தன் சொந்த பூமியான மேகாலயாவுக்கு சென்றார். அங்கு இந்தியாவின் தூய்மையான டவ்கி நதியில் சுற்றிப் பார்த்த போது எடுத்த வீடியோவை தன் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.
Advertisment
Advertisement
இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில், ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் தான் டவ்கி. இதன் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.
டவ்கியில் உள்ள ஊம்ங்கோ ஆற்றின் ஊம்ஸியம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருடாந்திர படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஊம்ங்கோ ஆறு ஜெயின்டியா மலைகள் மற்றும் காசி மலைகளின் இயற்கையான எல்லையாக உள்ளது.
இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், 1932-ம் ஆண்டில் பிரிட்டிஷார் ஒரு பெரிய தொங்கு பாலத்தை அமைத்துள்ளனர். ஷில்லாங்கின் பாரா பஜார் பகுதியிலிருந்து காலை நேர பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் ட்வ்கி எல்லைப் பகுதி வரையிலும் கிடைக்கின்றன.
ஒருவேளை நீங்க மேகாலயா போனா, இந்த டவ்கி நதிய மிஸ் பண்ணாம பாருங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“