vijay tv super singer diwakar : சூப்பர் சிங்கர் திவாகர் பற்றி தமிழ் மக்களுக்கு அறிமுகமே தேவையில்லை.சூப்பர் சிங்கர் சீசன் 4-ல் சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வெற்றியை தன்வசப்படுத்திய திவாகருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அவர் ஃபைனல்ஸில் ஜெயிக்க வேண்டும் என்று எத்தனையோ தமிழ் குடும்பங்கள் வேண்டுதல் கூட நடத்தினார்கள்.
Advertisment
காரணம், திவாகரின் பின்புலம். சாதாரண குடும்ப பின்ணணியில் இருந்து வந்த இவர் கடுமையான உழைப்பால் தன் திறமையை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுக்களையும் திவாகர் பெற்றார். சீசனின் இறுதி போட்டியில் அதிக பார்வையாளர்களின் ஓட்டு இவருக்கு தான் கிடைத்தது.
இவரது அந்த பாடலை நேரில் ரசித்த ஜானகி, ஆனந்த கண்ணீர் வடித்து, மேடையேறி வந்து அவரது நெற்றியில் முத்தமிட்டார். அரங்கமே அதிர்ந்தது. இத்தனை புகழ், பெருமைகளை அடைந்த போதும் மிகவும் எளிமையாக எல்லோரிடமும் பழகுவது தான் திவாகரின் ஸ்பெஷல் குணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
Advertisment
Advertisements
இவரின் குடும்ப புகைப்படங்களை இங்கே பார்க்கலாம் வாங்க.
திவாகருக்கு சென்ற வருடம் தான் அபி என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. சென்னையில் பிரம்மாண்டமாக அரங்கேறிய இந்த திருமணத்தில் அவரின் நீண்ட நாள் நண்பர்கள், சூப்பர் சிங்கர் குடும்பமே கலந்துக் கொண்டது.
இவர் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக் கொள்கவதற்கு முன், பல முன்னணி தொலைக்காட்சிகளின் இசைப்போட்டியில் திவாகர் கலந்துக் கொண்டுள்ளார். ராஜ் டிவி நடத்திய “வாய்ஸ் ஆப் தமிழ்நாடு” என்ற இசை போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார்.
தற்போது சினிமாவில் பல படங்களின் பின்னணி பாடகராக பாடல்களை பாடி வருகிறார் திவாகர்.முதலில் ஜெய் நடித்த ’வடகறி’ படத்தில் ’நெஞ்சுக்குள்ள நீ’ என்ற பாடலை விஜய் பிரகாஷுடன் இணைந்து பாடியிருந்தார். இமான் திவாகர் மீது நம்பிக்கை வைத்து கொடுத்த அனைத்து பாடல்களும் ஹிட் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil