விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. இந்த சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்கள்.
Advertisment
இவர்களின் பிளஸே இவர்களே பாடலை எழுதி, அதை பாடுவது தான். இந்த சீசனில் ராஜலட்சுமியை விட செந்திலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இறுதி டைட்டிலையும் அவரே அடித்தார்.
அந்த நிகழ்ச்சியில் சம்பாதித்த பேரு, புகழ் இருவரையும் எங்கையோ கொண்டு போகியது. வீடு, வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி, தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்கள் என இருவரும் பிஸியாகினர். செந்தில் -ராஜலட்சுமி திருமணம் காதல் திருமணம் ஆகும்.கிராமத்து பின்னணியில் இருந்து வந்த இருவரும் எப்போதும் வேட்டி சட்டை, கண்டாங்கி சேலையில் ஜொலிப்பது தான் வழக்கம்
Advertisment
Advertisements
இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil