/tamil-ie/media/media_files/uploads/2020/09/5-1.jpg)
vijay tv super singer nikhil mathew nikhil mathew
vijay tv super singer nikhil mathew nikhil mathew : விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நிகில் மேத்யூ-வை அவ்வளவு எளிதாக ரசிகர்கள் மறந்து இருக்க மாட்டர்கள். காடு திறந்தேன் சூப்பர் சிங்கரில் நிகில் மேத்யூ அந்த பாடலை பாடிய போது, அந்த பாட்டும் மீண்டும் உயிர் கொண்டது. அவரின் ஜீவனே உருகி பாடும் பாடலாய் அது இருந்தது. இன்றும் அந்த பாடலை தேடிப் போய் பார்ப்பது எத்தனை பேர்.
கேரளாவை சேர்ந்த நிகில் மேத்யே 2006 ஆம் ஆண்டில், ஏர்டெல் சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சியில் வென்றார்.அந்த சீசனில் முதல் டைட்டில் வின்னரும் அவரே. மிகச் சிறந்த கலைஞர்.இந்த வெற்றியின் பிறகு இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பீமா திரைப்படத்தில் “எனதுயிரே” பாடல் பாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இருந்த போதும் மற்ற பாடகர்களை போல நிகில் தமிழில் வளரவில்லை. இதுதான் ரசிகர்களுக்கு மிகப் பெரிய கவலை. இபோது லைவ் நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள், ஆன்லைன் மியூசிக் போன்றவற்றி கவனம் செலுத்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் கேரளாவில் செட்டில் ஆனார் நிகில்.
தமிழில் நிகில் மேத்யூ நிறைய பாடல்களை பாட வேண்டும் என்பது தான் ரசிகர்கள் ஆசையும் வேண்டுகோளும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.