விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி… சூப்பர் சிங்கர் ப்ரித்திகா ஞாபகம் இருக்கிறதா?

ரயில் விட போலாம் வா என்ற பாடலைப் பாடிய ப்ரித்திகாவின் குரலில் சொக்குண்டு கிடக்கிறார்கள் இசைப் பிரியர்கள்

vijay tv super singer prithika songs supersinger
vijay tv super singer prithika songs supersinger

vijay tv super singer prithika songs supersinger : விஜய் டிவி `சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில, ஜூனியர் சீசனில் கலந்துக் கொண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் டைட்டில் வின்னராக மகுடம் சூடிய ப்ரித்திகாவை அவ்வளவும் எளிதாக மறந்து விட முடியாது. அழகான கிராமத்து குரல் வளம்.

நிகழ்ச்சின் ஆரம்பத்தில் கேள்வி ஞானத்துலதான் பாடினார். அந்நிகழ்ச்சியின் ஒரு சுற்றுக்கு வந்த பின்னணிப் பாடகர் மாணிக்க விநாயகம் ப்ரித்திகா படிச்சிகிட்டிருந்த திருவாரூர் மாவட்டம் தியானபுரம் அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று அவரை மனதார வாழ்த்தினார்.

பின்பு, முறைப்படி இசைக் கத்துக்க குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். அப்போது இசைப் பள்ளியில படிக்க அவருக்கு உதவினார் மாணிக்க விநாயகம். பரியேறும் பெருமாள் படத்தில் வா ரயில் விட போலாம் வா என்ற பாடலைப் பாடிய ப்ரித்திகாவின் குரலில் சொக்குண்டு கிடக்கிறார்கள் இசைப் பிரியர்கள்.அந்த சீசனில் ஒரு கலக்கு கலக்கி கடைசியில் டைட்டில் வின்னர் ஆனார் ப்ரித்திகா. சிவகார்த்தியேகன் கையினால் பரிசு வழங்கப்பட்டது. சொந்த வீடு ப்ரித்திகாவால் அவரின் குடும்பத்துக்கு கிடைத்தது.

இவரின் அடுத்த பாடல் எப்போது வரும் என்ற ஆவல் தான் பலருக்கும். தற்போது கல்லூரி படிப்பை தொடர்ந்து கொண்டிருக்கும் இவர், விரைவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தோன்ற வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv super singer prithika songs supersinger prithika super singer hotstar super singer junior

Next Story
இம்யூனிட்டி… டேஸ்டி..! பூண்டு மிளகு சாதம் இப்படிச் செய்யுங்க!puli sadham recipe puli sadham in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express