malavika rajhesh vaidhya Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியும் ஒன்று. 8வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த அளவிற்கு பட்டிதொட்டியெல்லாம் பட்டைய கிளப்பி வரும் நிகழ்ச்சியாக உள்ளது.

தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் கடந்த வாரத்தில், வைல்ட் கார்ட் சுற்று முடிந்ததுள்ள நிலையில், ஒரு சில வாரங்களில் இறுதிப் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சூப்பர் சிங்கர் 8வது சீசன் பட்டத்தைத் தட்டிச் செல்ல உள்ள அந்த அதிர்ஷ்டசாலி யார் என்ற கேள்வியும், ஆவலாலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.

இதற்கிடையில், இந்த நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆன பாடகி மாளவிகா ராஜேஷ் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவரது திருமணம் அடுத்த சில மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாளவிகா ராஜேஷ் இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்தியாவின் மகள் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மோகன் வைத்யாவின் சகோதரர்தான் ராஜேஷ் வைத்யா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சூப்பர் சிங்கர் மாளவிகா அவரது வருங்கால கணவர் உடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவை இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil