சென்னையில் பிறந்து வளர்ந்த நக்ஷத்ரா நாகேஷ், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர் சென்னையிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் கல்லூரிப் பட்டப்படிப்பை முடித்தார்.
Advertisment
தந்தி டிவியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம், நக்ஷ்த்திரா தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கினார்.
Advertisment
Advertisements
பின்னர் சன் டிவியின் சன் சிங்கர் ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் லைம்லைட்டிற்கு வந்தார்.
அதைத் தொடர்ந்து ஆடியோ லான்ஞ், விருதுகள் வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
ஜோடி நம்பர் ஒன் சீசன் 8 நடன நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் நக்ஷ்த்திரா இருந்தார்.
கானா காதல், இவள் அழகு, என் இனிய பொன் நிலாவே, மற்றும் ஏனோ வானிலை மாறுதே போன்ற பிரபலமான குறும்படங்களிலும், பாலாஜி மோகன் இயக்கிய அஸ் ஐம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்ற தமிழ் வெப்சீரிஸிலும் அவர் நடித்தார்.
சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் உலகில் அறிமுகமானார் நக்ஷ்த்திரா.
தொடர்ந்து, லஷ்மி ஸ்டோர்ஸ், நாயகி போன்ற சீரியல்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில், நாயகியாக நடிக்கிறார்.
நக்ஷ்த்திரா 13க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
நக்ஷ்த்திரா நாகேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது இன்ஸ்டாகிராமை மட்டும் கிட்டத்தட்ட 24 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“