Advertisment

ஒரு முறையாவது சூப்பர் ஸ்டாரை சந்தித்து... விஜய் டி.வி பிரியங்கா வாழ்நாள் கனவு

’தொடர்ந்து ஷூட் இருந்ததால வெளியே எங்கயும் போக முடியல. அதனால இன்னைக்கு என்ன ஆனாலும், எங்க டிக்கெட் கிடைச்சாலும் பரவாயில்லனு நாங்க ஜெயிலர் படத்துக்கு போனோம்.

author-image
WebDesk
New Update
VJ Priyanka

VJ Priyanka

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Advertisment

பிரியங்காவுக்கு ரோகித் என்ற தம்பி உள்ளார். இவருக்கு ஐகா என்ற  பெண் குழந்தை உள்ளது. பிரியங்கா, மருமகள் ஐகா உடன் இருக்கும் படங்கள், வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாவில் பகிர்வார்.   

மேலும் பிரியங்கா தேஷ்பாண்டே எனும் பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பிரியங்கா, தம்பி ரோகித் பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற வீடியோ தான் இப்போது யூடியூபில் வைரல் ஆகியுள்ளது.

 

’இன்னைக்கு என் தம்பியோட பிறந்தநாள், அதனால அவன் எங்களை எண்டர்டெயின் பண்றான். 

’தொடர்ந்து ஷூட் இருந்ததால வெளியே எங்கயும் போக முடியல. அதனால இன்னைக்கு என்ன ஆனாலும், எங்க டிக்கெட் கிடைச்சாலும் பரவாயில்லனு நாங்க ஜெயிலர் படத்துக்கு போனோம். ரொம்ப நல்லா இருந்தது.

நெல்சன் சார் எனக்கு ரொம்ப ஸ்பெஷல், விஜய் டிவியில என்னோட முதல் டைரக்டர் நெல்சன் சார். அவர்தான் ஒல்லி பெல்லி டைரக்ட் பண்ணாரு. 

இந்த கரியர் தேர்ந்தெடுத்ததுக்கு அப்புறம் நமக்குன்னு கனவு வச்சிருப்போம். அப்படி எனக்கு ரெண்டு கனவு இருக்கு. அதுல ஒன்னு நான் நேரம் வரும்போது சொல்றேன். ஆனா, முக்கியமா நான் செய்ய ஆசைப்படுற இன்னொரு விஷயம், ரஜினி சார்க்கூட ஒரு இண்டர்வியூ தான்… 

ஒரு ரசிகையா அவர்க்கூட நான் இண்டர்வியூ பண்ணனும், இப்போவரை நான் அவரை நேர்ல பார்த்தது கிடையாது.

இந்த வீடியோவ தயவுசெய்ஞ்சு ரஜினி சார்கிட்ட கொண்டு சேர்க்கணும்னு மக்கள்கிட்ட அன்போடு கேட்டுக்கிறேன்’, என்று கண்கள் நிறைய கனவுகளுடன் சொல்கிறார் பிரியங்கா 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment