/tamil-ie/media/media_files/uploads/2019/10/rakul-preet-singh-starts-shooting-for-suriyas-ngk-photos-pictures-stills-22.jpg)
vijayadasami wishes in tamil
vijayadasami wishes in tamil : நவராத்திரி பண்டிகை 9 நாளும் அம்மன் கொலு வைத்து பூஜை செய்து வணங்குவார்கள். ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.விஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நன்னாளில், ஆரம்பக் கல்வியை தொடங்கினால், அவர்கள் மென்மேலும், கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.