விஜயதசமி வித்யாரம்பம் – பிள்ளைகளை அன்றே பள்ளியில் சேர்க்க பெற்றோர்கள் விரும்புவது ஏன்?

அகில உலகையும் ஆட்டி படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள்

vijayadasami vidyarambham tamil nadu school admission - விஜயதசமி வித்யாரம்பம் - பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை
vijayadasami vidyarambham tamil nadu school admission – விஜயதசமி வித்யாரம்பம் – பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை

Vijayadasami Vidyarambham : விஜயதசமி அன்று எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை காரணமாக, சில பெற்றோர் தங்களது குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம்.

விஜயதசமிக்கு பல சிறப்புகள் இருக்கின்றன. அகில உலகையும் ஆட்டிப் படைத்த மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கையாக அவதரித்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு மறைவு வாழ்க்கை முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் என்று கூறப்படுகிறது. விஜயதசமி நாளில் கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது நம்பிக்கை.


குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. மழலை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இதை முன்னிட்டு, நாளை விஜயதசமியை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் வித்யாரம்பம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுத்து, சிலர் பள்ளியிலேயே சேர்க்க உள்ளனர்.

விஜயதசமியை முன்னிட்டு, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நாளை திறந்து வைத்திருக்க வேண்டுமென்றும், குழந்தைகளை எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் முன்வந்தால், ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijayadasami vidyarambham tamil nadu school admission

Next Story
344 வயதான ஆமை மரணம் : துயரத்தில் நைஜீரிய மக்கள்Nigeria ALAGBA 344 year old tortoise Dies
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com