தமிழ் மக்களின் விருப்பமான கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக வியாழன் அன்று (டிச.28) காலமானார். அவருக்கு வயது 71.
அவரது மறைவால் ஒட்டுமொத்த தமிழமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை அருகே பிறந்த விஜயகாந்த், 70களின் இறுதியில் பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் நடிகராக நுழைந்தார். தொடர்ந்து 80 களின் நடுப்பகுதியில், ஒரு அதிரடி ஹீரோவாக விஜயகாந்த் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
திரைப்படங்களில் அவரது லெக் ஃபைட்டுக்காக பலராலும் விரும்பப் பட்டவர். இன்றைய இளைய நடிகர்கள் பலருக்கும் சண்டைக் காட்சிகளில் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.
1990-ல் பிரேமலதாவை மணந்த விஜயகாந்துக்கு, விஜய் பிரபாகர் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
ஒருமுறை பிரேமலதா விஜயகாந்த், தந்தி செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியலுக்கு அப்பாற்பட்டு, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, விஜயகாந்துடன் திருமணம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/hhpBk3hvXF5uiOSasfcC.jpg)
’நான் கல்லூரி படிப்பு முடித்த உடனேயே கேப்டனை திருமணம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை, எங்களோடது பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம் தான்.
என்னை பெண் பார்க்க வரும் போதுதான் நான் முதல் தடவை கேப்டனை பார்த்தேன்.
காவி வேஷ்டி கட்டி, மாலை போட்டு கால்ல செருப்பு கூட இல்லாம கார்ல இருந்து இறங்கி வந்தாரு. எங்கம்மா எல்லாருமே எவ்வளவு பெரிய ஹீரோ நம்ம வீட்டுக்கு வராரு. அவரை பயங்கரமா வரவேற்கணும் எதிர்பார்த்து நிக்கும் போது, அவர் இறங்கி வந்த விதம் இருக்கே… அவர் ஒரு ஹீரோ மாதிரியே இல்ல. 5 செகண்ட்ல அங்க இருந்த எல்லாருக்கும் அவரை பிடிச்சுட்டு.
அப்போக்கூட அவரு நான் சபரிமலைக்கு மாலை போட்டுருக்கேன். இந்த நேரத்துல பொண்ணு பாக்கலாமா கூட கேட்டுருக்காரு…
அப்போ கேப்டனுக்கு தொடர்ந்து ஷூட்டிங் இருக்கும். எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு மூணு நாள்தான் அவருக்கு ரெஸ்ட். எங்களோட ஹனிமூன் ஊட்டிதான். அதுக்கூட ஷூட்டிங்காக போனதுதான்.
கேப்டன் வெளியில ஒருமாதிரி வீட்டுல ஒருமாதிரி கிடையாது. அவருக்கு வீட்டுக்கு யார் வந்தாலும் எல்லாருக்கும் சாப்பாடு போடணும். ரொம்ப எளிமையா இருப்பாரு. எல்லார்கிட்டயும் அன்பா பழகுவாரு’.. இப்படி பல விஷயங்களை பிரேமலதா விஜயகாந்த் அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“