/indian-express-tamil/media/media_files/H04qBpSrJjlENubQCgyT.jpg)
Vijayalakshmi Ahathian
நடிகை விஜயலட்சுமி அகத்தியன் சமீபத்தில் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு தன் கணவர் ஃபெரோஸ் முகமது, மகன் நிலன் உடன் சன்வே லேகூன், பத்துமலை முருகன் கோயில் என பல இடங்களில் சுற்றிப் பாத்த போது எடுத்த படங்களை விஜி தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பல்வேறு நாடுகளிலும் முருகக் கடவுளுக்கு கோயில்கள் இருந்தாலும் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பத்துமலைக் குகைக் கோயில் மிகவும் பிரபலமானது.
இயற்கையாக உருவான சுண்ணாம்புக் குகைக்குள் அமைந்திருக்கும் இந்தக் கோயிலின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் 140 அடி உயர பிரமாண்ட முருகன் சிலைதான், இதன் புகழுக்குக் காரணம். திருவாரூரைச் சேர்ந்த சிற்பி தியாகராஜன் குழுவினரால் தான் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
இந்த பிரமாண்ட முருகனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் மலேசியாவிற்குச் செல்கின்றனர்.
பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்
உலகின் உயரமான கோபுரங்களில் இதுவும் ஒன்று.
451.9 மீட்டர் உயரம் உள்ள இந்த கோபுரம், 88 அடுக்குகளை கொண்டது. 41, 42வது தளங்களில், இரு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலமே நில மட்டத்திலிருந்து, 557 அடி உயரத்தில் (170 மீ) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரட்டை கோபுரம் அருகில், பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளன. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தை அமைத்துள்ளனர். உள்ளே நுழைந்ததும், கடலுக்குள் சென்று விட்ட பிரமிப்பை ஏற்படுத்தும். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.