விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட்டான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி கேரக்டரில் நடித்து ரசிர்களிடைய அதிகம் ரீச் ஆனவர் சதீஷ். சென்னையை சேர்ந்த இவர் 1979ல் பிறந்தார். 1990’s ல் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரது முதல் திரைப்படம் மின்சாரப்பூவே. அந்த படத்திற்கு ஏராளமான படங்களில் நடித்தார். ராமானுஜம் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திரைத்துறையில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது MGR படம்தான். இவர் எம்.ஜி.ஆர் ராக நடித்திருந்தார். இந்த படத்தை பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

சிறந்த குணச்சித்திர நடிகராக சினிமாவில் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தவர். அதன்பிறகு 2000 ஆம் ஆண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். முதன்முதலில் சன்டிவியில் ஒளிபரப்பான மந்திர வாசல் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு சூலம், கல்யாண பரிசு2, ஆனந்தம், திருமதி செல்வம், வம்சம், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ரங்கல விலாஸ், குலதெய்வம், பொன்னூஞ்சல் போன்ற நாடகங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மாடலிங் செய்து வந்த இவர் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். பிறகு விஜய்டிவியில் நுழைந்து மகாராணி சீரியலில் நடித்து வந்தார்.

சீரியல்களில் நடித்து வந்தாலும், வெள்ளித்திரையிலும் அவ்வபோது பெரிய படங்களில் நடித்து வந்தார். தனி ஒருவன், இருமுகன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். சீரியல்களில் இவருக்கு மிகப் பெரிய ஃபேன்ஸை உருவாக்கியது பாக்கியலட்சுமி சீரியல் தான். பாக்கியாவின் கணவர் கோபியாக நடித்து வருகிறார். மனைவிக்கு தெரியாமல் ராதிகா என்ற இன்னொறு பெண்ணுடன் பழகுவது அதை வீட்டிற்கு தெரியாமல் ஏமாற்றுவது என வில்லத்தன நடிப்பை வெளிப்படுத்துகிறார். இதற்காகவே இவரை பாக்கியலட்சுமி ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர்.

கோபி கேரக்டர் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பலமுறை அது வெறும் நடிப்பு ப்ளீஸ் திட்டாதீங்க என வீடியோ வெளியிட்டுள்ளார். நெகட்டிவ்வாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆகியுள்ளார்.இவருக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன்.நடிப்பை தாண்டி இவர் டான்ஸர், மியூசிக் மீது அதிக ஆர்வம். திரைத்துறை வாய்ப்புகள் வந்தாலும் மறுக்காமல் ஓகே சொல்லி நடித்து வருகிறார். பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் வருகிறதாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”