scorecardresearch

விஜே டூ சீரியல் ஆக்டர்ஸ்.. பாக்கியலட்சுமி ஜெனி லைஃப் ட்ராவல்!

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் திவ்யா கணேஷ்.

divya ganesh

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் ஜெனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் திவ்யா கணேஷ்.ராமநாதபுரத்தை சேர்ந்த இவர் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் சென்னைக்கு வந்துள்ளார். கல்லூரி நாட்களில் ஆல்பம் போடுவது போன்றவற்றின் மூலம் கலை ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர் விஜே வாக தன் வாழ்க்கையை துவங்கினாலும் ஆர் ஜே ஆக வேண்டும் என்பதே தனது கனவாக முதலில் வைத்திருந்தார். அப்போதுதான் புதுமணம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு என்னும் சீரியலில் மூலமாக வில்லி அவதாரம் எடுத்தார். தொடர்ந்து சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்தார். சன் டிவி, விஜய் டிவி, என பிஸியாக நடித்து கொண்டிருந்தவருக்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெனி ரோலுக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் சமைக்கவே தெரியதாதது போல கேரக்டர் தான் ஜெனிக்கு, ஆனால் உண்மையில் அவர் நன்றாக சமைக்ககூடியவர்.

பார்க்க ஹீரோயின் போல் இருக்கும் திவ்யாவிற்கு பிடித்த நடிகைகள் த்ரிஷா, நயன்தாராதானாம். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது இவருடைய பழக்கம். அந்த வகையில் இவர் அதிகம் எடுத்துக்கொள்வது இளநீர், நுங்கு, காய்கறிகள் போன்றவைதான்.அந்த அளவிற்கு தனது உடலை பிட் டாக வைத்துள்ளார்.மாடன் உடைகளை மட்டுமே அதிகம் விரும்பும் காலத்தில் இவருக்கு சேலை தான் மிகவும் பிடித்தமான உடை.

சீரியல் மட்டுமின்றி ஜீவி பிரகாஷின் அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.தற்போது இந்தியன் 2 படத்திலும் கேரக்டர் ரோலில் நடித்துள்ளர். கிராமத்தில் ஓரு நாள் என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள இவரை இன்ஸ்டாகிராமில் திவ்யா கணேஷை அதிகம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சீரியலில் சேலையிலேயே வரும் திவ்யா இன்ஸ்டாவில் கிளாமர் உடையில் ஃபோட்டோக்களை பதிவிட்டு வருகிறார். நல்ல கேரக்டரில் மெயின் ரோலில் நடிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார் திவ்யா கணேஷ்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Vijaytv baakiyalakshmi serial jeni actress divya ganesh biography