பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அகிலன். சென்னையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார். சிறு வயதிலேயே அகிலனுக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம். சென்னையில் அவர் படித்த எஸ்.ஏ கல்லூரியில் தான் கனா காணும் காலங்கள் ஷுட்டிங் நடைபெற்றுள்ளது. அதை பார்பதற்காகவே தினமும் கல்லூரி செல்வாராம். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மாடலிங் ஷார்ட் பிலிம் என பிஸியாக இருந்துள்ளார்.

சென்னையில் ஒரு மழைக்காலம், கேரமல் கண்ணே, உனக்கென நான், அடி பெண்ணே, RAA, கதிரும் நிலவும் போன்ற பல குறும்பங்களில் நடித்துள்ளார். இவற்றில் சென்னையில் ஒரு மழைக்காலம் படத்தில் நடித்ததற்காக Best actor male SIIMA விருது கிடைத்தது. மாடலிங் செய்துகொண்டு பல விளம்பரங்களில் நடித்து வந்தார். ஷார்ட் பிலிம்களில் நடித்ததால் கிடைத்த பாப்புலாரிட்டி அவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தார். அதன்பிறகு இறைவி,பியார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்தார்.

அகிலனுக்கு நிறைய சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் சீரியல்களில் நடித்தால் பட வாய்ப்புகள் கிடைக்காது என பலரும் கூறியதால் அதை மறுத்த வந்துள்ளார். இதனிடையே கடந்த 2019ஆண்டு விஜய்டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க அகிலனை கேட்டுள்ளனர். இந்த தொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட் என்பதால் ஓகே சொன்னார். அந்த சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார் அகிலன். ஹீரோ பாரதிக்கு தம்பியாக நடித்து வருகிறார். தொடக்கத்தில் அஞ்சலியை உருகி உருகி காதலிக்கும் அகிலன் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் 500 எபிசோடுகளை கடந்து நல்ல டிஆர்பியில் உள்ளது.

அகிலன் எப்போதும் உடற்பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்க விரும்புவாராம். டயட் பராமரிப்பதில் ரொம்ப அக்கறை எடுத்துக்கொள்ளும் அகிலன் face of chennai போன்ற விருதுகளை வாங்கியுள்ளார். ரஜினி மற்றும் கமல் மிகவும் பிடித்த நடிகர்கள். அவர்களது நடிப்பை பார்த்து நிறைய கற்றுக்கொண்டாராம். வாரணம் ஆயிரம் படம் பார்த்தபிறகு தான் ஃபிட்நஸ் மெயின்டைன் பன்னியுள்ளர். மியூசிக் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.

சீரியலுக்கு கிடைத்துள்ள பாப்புலாரிட்டியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ள அகிலனுக்கு வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் ஆசை..
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”