விஜய்டிவியின் பிரபலமான சீரியல் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் பாரதியின் அம்மாவாக நடித்து வருபவர் ரூபா ஸ்ரீ. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 13 வயதில் சினிமாத்துறையில் அறிமுகமானார். 1992ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கள்ளனும் போலீசும்’ தான் அவரது முதல் படம். அதன்பிறகு எங்க வீட்டு வேலன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து இதய நாயகன், பொண்டாட்டியே தெய்வம், டூயட், கங்கை கரை பாட்டு, புதையல் போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார். கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்தவர். நாயகியாக, குணச்சித்திர நடிகையாக, சில திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் நடித்தார்.
சினிமாவில் ஏராளமான படங்கள் நடித்துக்கொண்டிருந்தவர் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.1996ஆம் ஆண்டில் சன்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதல் பகடை தொடரில் தங்கம் என்கிற கேரக்டரில் நடிக்க தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி சீரியல்களில் நடித்து வந்தார்.ஏஷியாநெட்டி மற்றும் பிளவர்ஸ் டிவியில் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் விருந்தினராகவும் பங்குபெற்றுள்ளார். அதன்பிறகு விஜய் டிவியின் தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்தார். இதன் மலையாள வெர்ஷனான சந்தனமழாவிலும் இவரே மாமியாராக நடித்தார்.
சின்னத்திரையில் இவர் அணியும் ஆடைகள், ஜூவல்ஸ்க்கு தனி ஃபேன்ஸ்தான். 2014 ஆம் ஆண்டு முதல் 2017ஆம் சந்தனமழா சீரியலில் ஊர்மிளா தேவி என்கிற கேரக்டரில் நடித்தார். இதன் மூலம் மலையாள ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்தார். இதில் நடித்ததற்காக சிறந்த கதாபாத்திர நடிகை, சிறந்த முறையில் ஆடை அணியும் நடிகை போன்ற விருதுகளை வாங்கியுள்ளார். 25-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும், நிகழ்ச்சிகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்
ஏஷியாநெட் சேனல் ஒளிபரப்பாகி வரும் சீதா கல்யாணம் தொடரிலும் தற்போது நடித்து வருகிறார். தமிழில் டாப் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் சவுந்தர்யாக கேரக்டரில் பாரதியின் அம்மாவாக கண்ணம்மாவின் பாசமான மாமியாராக நடித்து கலக்கி வருகிறார். சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். திரைப்படங்களை விட சீரியலில் தான் எளிதாக ரீச் கிடைக்கிறது என்றும் படங்களை விட சீரியல் நடிப்பது ரொம்ப பிடித்துள்ளதாக கூறுகிறார் ரூபா. 18 வருடங்களாக நடித்து வருகிறார். நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், பல மொழிகளில் நடிப்பதால் அதுக்கான நேரம் கிடைக்கவில்லையாம். விரைவில் பெரியத்திரையிலும் அடுத்த ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil