கனா காணும் காலங்கள் மஞ்சுளா டூ ஈரமான ரோஜாவே அகிலா.. நடிகை சாய் காயத்ரி லைஃப் ட்ராவல்!

Vijay Tv Serial Actress: 2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார்.

sai gayathri bhuvanesh

ஈரமான ரோஜாவே சீரியலில் அகிலாவாக நடித்து மிகவும் பிரபலமானவர் சாய் காயத்ரி புவனேஷ். மதுரையை சேர்ந்தவர். சென்னையில் டிஜி வைஷ்ணவ் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார். காலெஜ் படிக்கும்போதே பல சேனல்களில் ஆங்கரிங் செய்து வந்தார். தொடர்ந்து ஜெயாடிவி, ஜீ தமிழ், ராஜ் டிவி போன்ற சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.

2011ல் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் மஞ்சு என்ற கேரக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். இந்த தொடரில் தனது சொந்த குரலில் பேசியுள்ளார். ஜெயாடிவியில் கில்லாடி ராணி என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கியுள்ளார். பிறகு ’சிவா மனசுல சக்தி’ சீரியலில் நடித்தார் சாய் காயத்ரி. அதிலும் இரண்டாவது லீடு ரோலில் நடித்தார். சரவணன் மீனாட்சி சீரியலிலும் நடித்துள்ளார்.

இவருக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே சீரியல் தான். இதில் அகிலா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் வரும் அகிலா-புகழ் ஜோடியின் ரொமான்ஸ், சண்டை சீன்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.ஈரமான ரோஜாவே சீரியலில் இவரே டப்பிங் பண்ணியுள்ளார். தற்போது இந்த சீரியல் 722 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

என்கிட்ட மோதாதே என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். நடிப்பு மட்டுமில்லாமல் கார்ப்பரேட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். “Lets Do Events” என்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வருகிறார். சென்னை அண்ணா நகரில் Lets Dance Studio என்ற டான்ஸ் ஸ்டூடியோவையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சாய் காயத்ரிக்கு டான்ஸ் ஆடுவது ரொம்பவே பிடித்த ஒன்று. இவருக்கு ஃபேமிலி சப்போர்ட் அதிகம்.தொகுப்பாளர், வீஜே, ஆங்கர், சீரியல் நடிகை, ஈவன்ட் மேனேஜர்,டான்ஸ் ஸ்டூடியோ என படிப்படியாக முன்னேறியவர். ஒரு பக்கம் பிசினஸ் இன்னொரு பக்கம் நடிப்பு என பேலன்ஸ் செய்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv eeramana rojave akhila saai gayathri bhuvanesh biography

Next Story
இங்கு தான் பெண் ஆணைத் தேடுகிறாள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com