படிச்சது விஸ்காம்.. புடிச்சது ஃபோட்டோகிராபி.. இப்போ டாப் சீரியல் ஆக்டர்.. ஈரமான ரோஜாவே வெற்றி பர்சனல் ப்ரொஃபைல்!

Vijay Tv Serial Actor: 2019 இல் விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த இளமையான ஜோடி என்ற விருது இவருக்கும் பவித்ராவுக்கு வழங்கப்பட்டது.

Dhiraviyam

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே என்ற முன்னணி சீரியலில் நடித்து வருபவர் வெற்றி. இவரது நிஜப் பெயர் திரவியம். கோயம்புத்தூரை சேர்ந்தவர் இவர் அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். புகைப்படத்துறையில் ஆர்வம் இருந்ததால் கல்லூரியில் விஸ்காம் படிப்பை தேர்ந்தெடுத்து படித்துள்ளார். கல்லூரி படிக்கும்போது ஏராளமான ஷார்ட் பிலிம்களில் நடித்துள்ளார். பிறகு அனிமேஷன் மற்றும் VFX கற்றுக்கொண்டு 3 வருடங்கள் துறை சார்ந்த வேலை செய்து வந்துள்ளார். அதன்பிறகு தான் சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆனார்.

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆடிஷனில் செலக்ட் ஆனவருக்கு வில்லேஜ் கேரக்டரில் நடிப்பதற்கு ரொம்பவே கஷ்டமாக இருந்துள்ளது. இந்த தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு சீரியல் மிகப் பெரிய ரீச் கொடுத்துள்ளது. காதல், ஆக்ஷன் சீன்ஸ் என அனைத்திலும் ரசிகர்களிடம் ஸ்கோர் வாங்கியுள்ளார். வெற்றி – பவித்ரா ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 2019 இல் விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த இளமையான ஜோடி என்ற விருது இவருக்கும் பவித்ராவுக்கு வழங்கப்பட்டது.

விஜய் டிவியின் மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் மனைவியோடு போட்டியில் கலந்துகொண்டார். என்கிட்டே மோதாதே, ஸ்பீட் கெட் செட் கோ போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் விருந்தினராக பங்கேற்றுள்ளார். ஸ்குவாஷ் விளையாடுவதில் அதிக ஆர்வமுள்ள வெற்றிக்கு சமைப்பது, மியூசிக் கேட்பது பொழுதுபோக்கு. இவர் தீவிர கமல் ரசிகர். தனது நீண்ட நாள் காதலியான ருதுவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். சீரியலில் நிறைய சீன்களில் நடிப்பதற்கு முன் வீட்டில் கண்ணாடி முன்பு நின்று நிறைய பிராக்டீஸ் செய்வாராம். ஒரே சீரியலில் நடித்து லட்சணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட வெற்றிக்கு சினிமாவில் நல்ல ரோலில் நடிக்க வேண்டும் என்பது விருப்பமாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv eeramana rojave dhiraviam rajakumaran biography

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express