அறிமுகமே கெளதம் மேனன் படம்.. சீரியல் டூ சினிமா : ஈரமான ரோஜாவே புகழ் பர்சனல் ப்ரொபைல்!

Vijay Tv Serial Actor: ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் புகழ் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவின் நண்பராக நடித்துள்ளார்.

eeramana rojave shyam

விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த தொடரில் புகழ் கேரக்டரில் நடிப்பவர் ஷியாம். கோயம்புத்தூரை சேர்ந்தவர். கல்லூரி படிக்கும்போதே சினிமா மீது ரொம்பவே ஆர்வம். சென்னை வந்தவருக்கு அவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு பக்கம் சினிமாவில் சான்ஸ் தேடிக்கொண்டே மார்க்கெட்டிங் வேலையும் செய்து வந்தார். ஹிந்தியில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிக்கலாம் என மும்பை சென்றும் முயற்சி செய்தார். எந்த வாய்ப்பும் கிடைக்காதால் சென்னை திரும்பியவர் சின்னத்திரைக்குள் நுழைந்தார். முதன் முதலில் விஜய்டிவியின் புதுக்கவிதை என்ற தொடரில் நடித்தார்.

தொடர்ந்து களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, கண்ணம்மா, அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் போன்ற பல சீரியல்கள் தொடர்களில் நடித்து ஃபேமஸ் ஆனார். விஜய் டிவியில் மெட்ராஸ் என்ற ப்ராஜெக்டுக்காக 10 கிலோ உடல் எடையை குறைத்து நடித்தார். கேங்ஸ்டர் ஸ்டோரி என்பதால் வடசென்னை பையன் போல் தெரிவதற்காக ரொம்பவே வொர்க் பண்ணியுள்ளார். ஆனால் அந்த தொடர் வெளிவரவில்லை. பிறகுதான் பல சீரியல்களில் நடித்தார். இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ஈரமான ரோஜாவே தொடர்தான்.அதில் புகழ் கேரடக்டரில் நடித்து நல்ல ரீச் ஆனார். புகழ்-அகிலா காதல் ஜோடிக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்தான்.

வெள்ளித்திரையிலும் நடித்துள்ளார் புகழ். அந்த கதையே சுவாரஸ்யமானது. ஷியாம் தனது நண்பருடன் காபி ஷாப் சென்றிருந்தபோது அங்கு இயக்குநர் கௌதம் மேனனை சந்தித்துள்ளார். பிறகு தனக்குள்ள நடிப்பின் மீதான ஆர்வத்தை பற்றி கூறியுள்ளார். அதன்பின்னர்தான் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு ஆடிஷனுக்கு அழைத்துள்ளார் கௌதம் மேனன். சிம்புவின் நண்பராக நடித்தார். இப்படித்தான் வெள்ளித்திரையில் நுழைந்தார். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நாகசைதன்யாவுடன் இவரே நடித்துள்ளார்.

பல்வேறு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியவர் புகழ். ஜோடி நம்பர் ஒன் சீசன்8, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். கல்லூரி படிக்கும்போதே பல டான்ஸ் போட்டிகளில் பங்கேற்று ஆடியுள்ளார். இவருடைய ஃபேவரைட் நடிகை கரீனா கபூர்தான். என்னதான் சீரியல்களில் பிரபலமானாலும் சினிமாதான் புகழின் மெயின் எய்ம். சினிமாவில் சாதிக்க வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv eeramana rojave pugazh actor shyam biography

Next Story
தவறான கூகுள் பதிவு, தினசரி ஊதியம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா வைரல் வீடியோ!Pandian Stores Hema Youtube Channel Review Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express