தேன்மொழி பிஏ, நாம் இருவர் நமக்கு இருவர் என டாப் சீரியல்களின் ஆக்டர்ஸ் அஸ்ரிதா ஸ்ரீதாஸ். இவரது பூர்வீகம் கேரளா. பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். கேரளா மற்றும் சென்னையில் கல்லூரி படித்துள்ளார். இவரது தந்தை புரொடக்ஷன் மேனேஜர். இவரது அம்மா புஷ்பாவும் சீரியல் நடிகை. அஸ்ரிதா மூன்று வயதில் நடிக்க வந்துள்ளார். முதன்முதலில் அப்பா அம்மா என்ற சீரியலில்தான் அறிமுகமானார். சீரியல் வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் மாடலிங் செய்து வந்துள்ளார். 35க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார்.
Advertisment
கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதையில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சொந்த பந்தம், கல்யாண பரிசு, நாம் இருவர் நமக்கு இருவர் உட்பட பல சீரியல்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் 2015ல் கடல் கடந்த காவியம் படத்தில் நடித்தார். 2016ல் சம்டைம்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் தெகிடி, திருமணம் என்னும் நிக்கா, ஆறாவது சினம், சில நிமிடங்களில், என்னை அறிந்தால், சிக்ஸர், கொரில்லா, வனமகன் போன்ற பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
சின்னத்திரை, வெள்ளித்திரை என பிசியாக நடித்து வந்தவர் கொரோனாவுக்கு பிறகு இரண்டு ஹிட் சீரியல்களில் நடித்து வருகிறார். தேன்மொழி பிஏ சீரியலில் ஜாக்குலின் தங்கையாக, நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் ரட்சிதாவின் தங்கையாக நடித்து கலக்கி வருகிறார். கல்யாணபரிசு 2 தொடரிலும் மகராசி சீரியலிலும் நடித்து வந்தார். இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள அவர் ஏகப்பட்ட ஃபோட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். தன்னுடைய ஃபேன்ஸ்களை அதிகம் மதிப்பவர், ரசிகர்களின் நிறைய கமெண்டுகளுக்கு லைக்ஸ் பண்ணுவாராம். சீரியலில் ஹீரோயின் ரோல் பண்ணாலும் செம சேலன்ஞ்சிங் ஆன ரோல் பண்ண வேண்டும் என்பது அஸ்ரிதாவின் ஆசை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil