கனா காணும் காலங்கள் முதல் நாம் இருவர் நமக்கு இருவர் கத்தி வரை… ராஜூ ஜெயமோகன் லைஃப் ட்ராவல்..

vijaytv serial actor: கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை மூலம் தான் முதன்முதலில் சின்னத்திரையில் அறிமுகமானார்.

raju jayamohan

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் கதிரேசன் கேரக்டர் ரொம்பவே பிரபலமானது. இதில் நடித்து வருபவர் ராஜூ ஜெயமோகன். திருநெல்வேலியை சேர்ந்த இவர் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் வேலை செய்துள்ளார். இவர் முதல் சீரியல் என்ட்ரி கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை. 90’s கிட்ஸ்களை சீரியல் பார்க்க வைத்த தொடர் விஜய் டிவியின் கனா காணும் காலங்கள். இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு அதில் நடித்த பல பிரபலங்கள் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்தனர். அதேபோல் ராஜூவும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் கவினின் தோழனாக நடித்திருந்தார். நல்ல ரீச் கிடைத்தது. பின்னர் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார்.

சின்னத்திரையில் கிடைத்த புகழால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். முதன் முதலில் 2015ல் துணை முதல்வர் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததார். அதன்பிறகு 2017ல் கவினுடன் சேர்ந்து நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்தார். அதிலும் நண்பன் கேரக்டர்தான். இவர் உண்மையில் பிக்பாஸ் கவினின் நெருங்கிய நண்பர். சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்தது முதல் இருவரும் நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். கவின் பிக்பாஸ் 3சீசனில் பங்கேற்றபோது பல யூடியூப் சேனலுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். பெரும்பாலும் நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் சேர்ந்தே செல்வது வழக்கம்.

சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கமே திரும்பினார். பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற ரோலில் நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சீசன்2வில் மாயனின் நண்பனாக கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மாயனின் தங்கை காயத்ரியை திருமணம் செய்து கொண்ட பிறகு கதை விருவிருப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதுவும் கத்தி காயத்ரி ரொமான்ஸ் சீனை பார்க்கவே தனி கூட்டம் உள்ளது.

மாயன்-கதிரேசன் நட்பும் ரசிக்கும்படி இருக்கும். சோசியல் மீடியா புல்லா இவர்களுக்கு ஃபேன்ஸ்தான். ராஜு கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான தாரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கும்போதிலிருந்து காதலித்து வந்தனர். இவருக்கு பிடித்த நடிகை சன்னி லியோன். சீரியலோ திரைப்படமோ நண்பன் கேரக்டர்னா கதிரேசனுக்கு பிடித்த ஒன்று.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv naam iruvar namaku iruvar kathi kathiresan raju jeyamohan biography

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express