விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ். சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சிறு வயதிலேயே நடிப்பு மீது இருந்த அர்வத்தால் நிறைய ஆடிஷன் அட்டன் பண்ணியுள்ளார். இவர் ஒரு டான்ஸரும் கூட. கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். முதன்முதலில் சன்டிவியின் பிரபல 90's ஃபேவரைட் சீரியலான தென்றலில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் வில்லி முத்தழகுவாக கலக்கி இருந்தார். அவரது கேரக்டருக்கு கிடைத்த ரீச்சை தொடர்ந்து பல முன்னணி டிவிகளில் உள்ள சீரியல்களில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார்.
Advertisment
பொன்னூஞ்சல், சோலார் டிவியின் தாமரை சீரியல், மெல்ல திறந்தது கதவு, பிரியசகி, அழகி, களத்து வீடு, மோகினி போன்று பல சீரியல்களில் வரிசையாக நடித்து வந்தார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு அரண்மனை கிளி சீரியலில் ரேணுகா என்ற ரோலில் வில்லியாக நடித்தார். பாசிட்டிவ் கேரக்டரை விட நெகட்டிவ் கேரக்டர்தான் இவருக்கு அதிகமாக கிடைக்கிறதாம். நடிப்பை தாண்டி இவர் Mr and Mrs கில்லாடி, ஜோடி நம்பர் 1 சீசன் 9 போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டுள்ளார். இவர் டான்ஸர் யுவராஜ் என்பரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்க ஒரு மகன் உள்ளார்.
Advertisment
Advertisements
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பல சீரியல்கள் ஸ்டாப் ஆனதால் வீட்டில் முடங்கி கிடந்தார். தற்போது இரண்டு சீரியல்களில் என்ட்ரி கொடுத்து பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். சித்தி2 சீரியலில் வில்லத்தனமாகவும், நாம் இருவர் நமக்கு இருவர் 2 வில் பாசமான தங்கையாக, கத்தியுடனான ரொமன்ஸ் என கலக்கி வருகிறார். இவர்களுக்கு தனி ஃபேன்ஸ் பேஜஸ் உள்ளது. தற்போது சின்னத்திரையின் டிரெண்டிங் பேராக உள்ளனர்.
சீரியலில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் ஆக இருந்தாலும் சரி புது பட வாய்ப்புக்காக கையில் எடுத்திருக்கும் ஒரே ஆயுதம் போட்டோஷூட் தான். அதையும் விதவிதமாக எடுத்து தங்களின் திறமையை காட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்றனர். இவர்களின் போட்டோ ஷூட்டை பார்த்து ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மாதிரிதான் காயத்ரியும். சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு இடத்திலிருந்து கொண்டிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"