‘மெட்டி ஒலி ராஜம்’ முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை அம்மா வரை… நடிகை சாந்தி வில்லியம்ஸ் பயோகிராபி..

முதன் முதலில் 1970ஆம் ஆண்டு “வியட்நாம் வீடு” என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.

santhi williams

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையின் அம்மாவாக நடித்து வருபவர் சாந்தி வில்லியம்ஸ். தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். பல்வேறு தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். சாந்தி தனது 12 வயதில் குழந்தை நட்சத்திரமாக ஃபீல்டுக்குள் நுழைந்தவர். முதன் முதலில் 1970ஆம் ஆண்டு “வியட்நாம் வீடு” என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கினார்.

அடுத்ததாக மதன மாளிகை, ஜெனரல் சக்ரவர்த்தி, ஜென்டில்மேன், கருப்பு நிலா, கிழக்கு முகம், வானவில், சிநேகிதியே, ஆண்டான் அடிமை, டும் டும் டும், லவ்லி, பூவெல்லாம் உன் வாசம், ரோஜாக் கூட்டம், பார்த்திபன் கனவு, திருமலை, அந்நியன் போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். தொடர்ந்து ஒரு பொண்ணு ஒரு பையன், சீனாதானா, ஓடும் மேகங்களே, மூன்று பேர் மூன்று காதல், பாபநாசம் போன்ற திரைப்படங்களிலும் லேட்டஸ்ட்டாக நடித்துள்ளார். சின்னத்திரையில் முதன்முதலாக சித்தி தொடரின் மூலம் தான் என்ட்ரி ஆனார்.

சின்னத்திரையில் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது மெட்டி ஒலி தொடர்தான். இதில் ராஜம்மா என்ற கேரக்டரில் அம்மாவாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து தங்கமான புருசன், மீனுகுடி, ராஜராஜேஸ்வரி, வசந்தம், கலசம், பந்தம், வைர நெஞ்சம், கல்யாணம், தங்கம், தென்றல் சீரியலில் ருக்மனி, சாந்தி நிலையம், தங்கம், வாணி ராணி, கேளடி கண்மணி என 20க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ், சந்திரலேகா, செந்தூரப்பூவே என மூன்று தொடர்களில் நடித்து வருகிறார். பல சீரியல்களில் வில்லியாக கலக்கியுள்ளார்.

சாந்தியின் கணவர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வில்லியம்ஸ்தான். கணவர் இறந்த பின்பு பல்வேறு கஷ்டங்களை சந்தித்த இவர் பல போராட்டங்களுக்கு பிறகு சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். சீரியல்களில் பிசியான அம்மாவாக கலக்கி வருகிறார் சாந்தி.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv pandian stores actress santhi williams biography

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com