நிகழ்ச்சி தொகுப்பாளர் டூ சீரியல் ஆக்டர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா லைஃப் ட்ராவல்!

விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.

vj deepika,

விஜய் டிவியின் டாப் ரேட்டிங்கில் உள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் விஜே தீபிகா. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே ஆங்கர் ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என தெரிந்து திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். பிறகு சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்சிஏ படிப்பில் சேர்ந்துள்ளார். கல்லூரியில் படித்துக்கொண்டே பல சேனல்களில் ஆங்கரிங் சான்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

வாய்ப்பு தேடி அலைந்த ஐஸ்வர்யாவுக்கு முதன் முதலில் மூன்டிவியில் தொகுப்பாளராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அங்கு பல லைவ் ஷோக்களை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு கலைஞர் டிவியில் தொகுப்பாளராக இருந்தார். இதன் மூலம் சன்டிவியின் சந்திரகுமாரி சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. அந்த சீரியல் சில எபிசோடுகள் ஓடினாலும் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைந்தார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஆனந்தியின் தோழியாக நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு விஜய் டிவியின் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்காக இரண்டு முறை ஆடிஷன் அட்டர்ன் பண்ணியுள்ளார். ஒருவழியாக ஐஸ்வர்யா கேரக்டர் கிடைத்துள்ளது. கடைக்குட்டி தம்பியான கண்ணணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த சீரியல் தான் தீபிகாவுக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்துள்ளது. கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடிக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இவர் ஏராளமான ஷார்ட் பிலிம்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு ஆக்டிங்கை விட காம்பியரிங் தான் ரொம்ப பிடிக்குமாம். சின்ன வயதிலிருந்தே ஃபேவரைட் நடிகர் தனுஷ்தான். தீபிகா 9ஆம் வகுப்பு படிக்கும்போது குட்டி படம் பார்த்துள்ளார். அப்போது முதல் தனுஷ் ரசிகை. சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவ் ஆனவர். அவ்வபோது ஃபோட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். VJ Deepika என்ற சேனலில் Home Tour, சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், இன்ஸ்டா ரீல்ஸ் என சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv pandiyan stores actress aishwarya vj deepika biogrpahy

Next Story
நான் நின்றுகொண்டேதான் குழந்தை பெற்றுக்கொள்வேன் – பாரதி கண்ணம்மா ஃபரீனாVijay Tv Bharathi Kannama Farina Sharings Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com